அமெரிக்க கனவு, இது பல கோடி இந்திய மக்களின் வாழ்நாள் கனவு. அமெரிக்காவுக்கு சென்று படித்தோ அல்லது வேலை செய்தோ ஒரு கார், ஒரு வீடு, அதன் பின்பு திருமணம், அமெரிக்காவிலேயே பிள்ளை பெற்று படிக்க வைத்து அங்கேயே செட்டில் ஆக வேண்டும் இதுதான் இன்றைய இளம் தலைமுறையினரின் லைப்டைம் டிரீம் ஆக உள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் இருக்கும் மக்கள் அமெரிக்கா செல்ல விசா வாங்க வேண்டும் என்றால் 300 நாள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், அமெரிக்க அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவில் தனது தூதரக நடவடிக்கைகளை விரிவுபடுத்த அமெரிக்கா முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், அது 2025 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் செயல்படத் தொடங்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயான வளர்ந்து வரும் உறவில் பெங்களூரில் அமெரிக்க தூதரகம் முக்கிய மைல்கல்லாகும். "இந்தியாவின் சிலிகான் வேலி" என்று அழைக்கப்படும் பெங்களூரு, தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப், இன்னோவேஷனுக்கு முக்கியமான பகுதியாக இருக்கிறது. இந்த நகரத்தில் அமெரிக்க தூதரகம் நிறுவப்படுவது இரு நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து, வர்த்தகம், பொருளாதாரம் அதிகரிக்க வேகமான வழியாக அமையும்.
பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் புதிய தூதரகங்களை திறப்பது குறித்த அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் 2023 ஆம் ஆண்டு சந்தித்த போது இணைந்து வெளியிடப்பட்டது.
பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவது அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும். முன்னதாக, கர்நாடக மாநில மக்கள் அமெரிக்க விசா பெற சென்னை, ஹைதராபாத் அல்லது டெல்லிக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது.


Click it and Unblock the Notifications