கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் வேகமாக வளர்ந்து வரும் வேளையில் இதன் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு, இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தை கர்நாடகா அரசு தேட ஆரம்பித்துள்ளது.
ஜூன் 20ஆம் தேதி, கர்நாடக மாநில உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை (ஐடிடி) அமைச்சர் எம்.பி. பாட்டீல் தலைமையில் இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது மூலம் பெங்களூர் மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். சரி இந்த புதிய விமான நிலையம் எங்கு வருகிறது தெரியுமா..?

விதான் சவுதாவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஐடிடி துறை செயலாளர் என்.மஞ்சுளா, கர்நாடக தொழில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.சி.சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறுகையில் பெங்களூரின் புதிய விமான நிலையத்திற்கான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மூன்றாவது பரபரப்பான விமான நிலையமான கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், கடந்த ஆண்டு 37.5 மில்லியன் பயணிகளையும் 4 லட்சம் டன் சரக்குகளையும் கையாண்டது. இது எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப இரண்டாவது விமான நிலையத்தின் அவசியமானதாக உள்ளது என தெரிவித்தார்.
பெங்களூருக்கு வெளியில் ஒரு தொழிற்சாலை எகோசிஸ்டம் உருவாக்க இரண்டாவது விமான நிலையம் தேவை என்று அவர் கூறினார்.
தேவனஹள்ளி விமான நிலையம் நிறுவப்பட்டபோது, 2033 வரை 150 கிலோமீட்டர் சுற்றளவில் வேறு எந்த விமான நிலையமும் கட்டப்படக்கூடாது என்ற ஒப்பந்த நிபந்தனைகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒன்பது ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தற்போதே தயாரிப்புகளைத் தொடங்க வேண்டியது அவசியம்.
தற்போதைய விமான நிலையம் 2033க்குள் அதிகபட்ச பயணிகள் கையாளும் திறனையும் 2040க்குள் அதிகபட்ச சரக்கு கையாளும் திறனையும் எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. துமகுரு சாலையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய விமான நிலையத்திற்கான இடமாக தும்கூர் சாலை சிறந்த தேர்வாக இருக்கும் என கருதப்படுகிறது, குறிப்பாக 2024-25 கர்நாடக மாநில பட்ஜெட்டில், பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையம் (BIEC) முதல் தும்கூர் வரை மெட்ரோ ரயிலை திட்டத்தை நீட்டிக்க அறிவிக்கப்பட்டிருப்பதால் இது உண்மையாக வாய்ப்புள்ளது.
2022 ஆம் ஆண்டில், அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த முருகேஷ் ஆர் நிராணி, பெங்களூரு-புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வசந்தநரசபுராவில் தொழில்துறைகளுக்குப் பகுதியாக மாற்றுவதன் மூலம், தும்கூர் மற்றும் சிரா இடையே பெங்களூரின் 2வது விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தும்கூர் மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை 2022ல் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.


Click it and Unblock the Notifications