சென்னை மாநகராட்சி கோயம்பேடு பேருந்து நிலையத்தைச் சுற்றி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யவும், பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தவும் பெங்களூரு, தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் பிற வடக்கு பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான பஸ் ஸ்டாண்டை திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது.
சுமார் ரூ.427 கோடி செலவில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏர் கண்டிஷனிங், ஏராளமான பார்க்கிங் இடம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனி வசதிகள் உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கியதும், அங்கு மக்களுக்கு ஏதுவாக 41 கடைகள் மற்றும் எட்டு பேருந்து டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்படும். CMDA, கோயம்பேடு மொபசில் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு இந்த நிலத்தை புதிய வளர்ச்சி திட்டத்திற்காக பயன்படுத்த உள்ளது.
தமிழ்நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனமயமாக்கி பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான CMDA-யின் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பேருந்து இயக்கத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
தற்போது தர்மபுரி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு அனைத்து பேருந்து நிலையத்தில் இயக்கப்படுகின்றன. தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் (கேசிபிடி) க்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் சென்னைக்கு மேற்கு பகுதிக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் குத்தம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications