தீபாவளி பண்டிகைக்கு பிறகு காபி மற்றும் டீ தூள் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெங்களூரில் உள்ள நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்திய காபி வியாபாரிகள் சங்கம் (ICAT) ஒரு கிலோ காபி தூளின் விலையை ரூ.100 உயர்த்தி அறிவித்துள்ளது. அதேபோல டீ தூள் விலையும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு டீ தூள் மற்றும் காபி தூள் விலையில் மூன்றாவது விலை உயர்வு ஏற்பட இருக்கிறது. மேலும் பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் டீ, காபி விலையை 2 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி சிலிண்டர் மற்றும் பால் விலையும் உயர்ந்து வருகிறது. ஆனால் இந்த விலை மாற்றங்களை இறுதி செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர் நலன்களை கருத்தில் கொள்ள உள்ளதாகவும் வியாபாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் விலை உயர்வு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. தற்போது, வழக்கமான ஹோட்டல்களில் ஒரு கப் காபி அல்லது டீ ரூ. 15 முதல் ரூ. 35 வரை உள்ளது. அதே சமயம் பெரிய பெரிய சொகுசு ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் ரூ. 100-க்கு மேல் வசூலிக்கின்றன. நடுத்தர ஹோட்டல்களில் ஒரு கப் காபி, டீ-க்கு ரூ. 2 வரை மிதமான அதிகரிப்பு உள்ளது.
அண்மைக்காலமாக காபி விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு தீவிர வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற கருதும் நிலவுகிறது. இதனால் சந்தையில் காபி தூளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சிக்கரி கலந்த காப்பி தூள் கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 ரூபாய் வரையில் விற்பனையானது.
தற்போது, ரோபஸ்டா காபி தூள் கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.420 வரையிலும், அரபிக்கா காபி தூள் கிலோவுக்கு ரூ.290 முதல் ரூ.465 வரையிலும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சிக்கரி இல்லாத காபி தூள் ஒரு கிலோவுக்கு ரூ.750 ஆக உயர்ந்துள்ளது, இதனால் ICTA அமைப்பு மேலும் ரூ.100 உயர்வை அமல்படுத்தவுள்ளது.
காபி மட்டுமின்றி, டீ தூள் விலையும் கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்புடன், பால் விலையும் உயர்ந்துள்ளது. காபி விலை உயர்வை தொடர்ந்து, ஒரு கப் டீ விலையும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் காலை ஒருமுறை, 11 மணி அளவில் ஒரு முறை, மாலை வேளையில் ஒரு முறை என குறைந்தது 3 முறையாவது டீ காபி குடிக்கும் நபர்கள் அதிகம். தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்த விலை உயர்வு ஏற்பட்டால் தினசரி டீ, காபி குடிக்கும் நபர்களை அது பாதிக்கலாம்


Click it and Unblock the Notifications