குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நடுவே ஹோலி பண்டிகை.. பெங்களூரு ஹோட்டல்கள், ரிசார்ட்கள் குதூகலமாக ரெடி..!!

ஹோலி பண்டிகை நெருங்கிவிட்டது. இது அதிவிமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் பெங்களூருவில் உள்ள பல ஹோட்டல்கள், ரிசார்ட்கள் ஏகத் தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள், நீச்சல்குள ஆட்டங்கள், மழை டான்ஸ், சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளன. நகரில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்னைக்கு மத்தியிலும் குதூகலமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாட இந்த நிறுவனங்கள் படுஜோராக ஆயத்தமாகி வருகின்றன.

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நடுவே ஹோலி பண்டிகை.. பெங்களூரு ஹோட்டல்கள், ரிசார்ட்கள் குதூகலமாக ரெடி..!!

பெங்களூருவின் Book My Show பக்கத்துக்கு சென்றால் நகரின் மிகப் பெரிய ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி ஒரு பெரும் பட்டியலை பார்க்கலாம். அதில் பெரும்பாலும் நீச்சல்குள கேளிக்கைகள், உணவு, மதுபானங்கள் கூடவே டிஜேக்களின் மியூசிக் என்று வெறும் ரூ.49 கட்டணத்தில் இருந்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள மீனாட்சி ரிசார்ட்டில் பிக்கஸ்ட் பூல் ஆக்சஸ் மற்றும் ரெயின் டான்ஸ் நண்பகல் 11 மணி முதல் மாலை 6 மணிவரை மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ரங்கீலா உத்சவ் என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பெங்களூருவின் மிகப் பெரிய ஹோலி பார்ட்டி எனக் கூறப்படுகிறது. புக் மை ஷோவில் ரூ.99 முதல் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன.

யஷ்வந்த்பூரில் உள்ள ஹோட்டல் லேராய் கிராண்டில் தி ஒன்லி ரூஃப்டாப் ஓபன் ஏர் பூல் பார்ட்டி நடத்தப்படுகிறது. ஹோலிகிராம் பூல் பார்ட்டி மார்ச் 24 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிக்கெட்கள் ரூ.99 முதல் கிடைக்கிறது.

பெத்தசனாபூராவில் உள்ள லாகோ பாம்ஸ் ரிசார்ட்டில் ஹியூஜ் ரெயின் டான்ஸ் ஜோன் மற்றும் பூல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசி ஹோலி வால்யூம் 08- ஓபன் ஏர்- பூல் ஹோலி பெஸ்டிவல் நிகழ்ச்சி மார்ச் 23 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிக்கெட்கள் ரூ.199 முதல் விற்கப்படுகிறது.

ஒயிட்ஃபீல்டில் உள்ள ராதா ஹோம்டெல் ஹோட்டலில் ப்ரீ-ஹோலி பார்ட்டியுடன் ஃப்ரீ கலர்ஸ் அண்டு ரெயின் டான்ஸ் செட் அப் நிகழ்ச்சி மார்ச் 24, 25 தேதிகளில் நடைபெறுகிறது.

இதனிடையே ஒயிட்ஃபீல்டில் உள்ள அலாஃப்ட் ஹோட்டலில் மிக பிரமாண்டமான ஹோலி பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் ஃப்ரீ அன்லிமிடெட் கலர்ஸ் அண்டு ரெயின் டான்ஸ் நிகழ்ச்சி மிக கோலாகலமாக நடைபெறுகிறது.
மார்ச் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். டிக்கெட் விலை ரூ.49 முதல் தொடங்குகிறது.

குறிப்பிடத்தக்கவகையில் பெங்களூருவில் உள்ள பல ஹோட்டல்களில், டிரை ஹோலி பார்ட்டிகள், சிறப்பு உணவுகள், பானங்கள், டிரை கலர்கள், நான்-ஸ்டாப் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் தண்ணீர் வீணாக்கப்படாது.

Story Written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+