பெங்களூர், நொய்டா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் டாப் மெட்ரோ நகரங்களில் கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட 2 வருடம் வாடகை உயர்வு செய்யப்படாமல், பல வீடுகள் காலியாகியிருந்தது. இதனால் அப்போது வாடகை வீட்டுக்கு யாரேனும் வந்தால் போதுமென வீட்டின் உரிமையாளர்கள் இருந்தனர்.
ஆனால், தற்போது நிலைமை மாறி, வீட்டு உரிமையாளர்கள் அதிகபட்ச வாடகையைப் பெற பல்வேறு தந்திர வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் எப்போது வீட்டை காலி செய்ய சொல்வார்கள், அடுத்த வருடம் வாடகை எவ்வளவு உயர்த்தப்படும் என பல கேள்விகளை வைத்துக்கொண்டு தினமும் நம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

உதாரணமாக 29 வயதான நபர் பெங்களூரில் கடந்த 10 வருடமாக பல இடத்தில் பல வீடுகளை மாறி தற்போது ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு வாடகை ஒப்பந்தம் முடிவதற்கு 2 மாத காலம் இருக்கும் வேளையில், இப்போத வாடகை உயர்த்த போகிறோம் என அறிவித்துள்ளனர். சரி வாடகை 8-10 சதவீதம் தான் உயரும் என நம்பி வீட்டு ஓனரிடம் பேச போனவருக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியுள்ளது.
காரணம் வீட்டு உரிமையாளர் தற்போது அவர் இருக்கும் வீட்டின் வாடகையை 30000 ரூபாயில் இருந்து 53,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது கிட்டத்தட்ட 77 சதவீதம் அதிகம் என்பதால், விரைவில் வீட்டை காலி செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.
இதேபோல் நொய்டாவில் ஒரு பெண் எதிர்கொண்ட பிரச்சனை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியூரில் தங்கியிருக்கும் இந்த பெண்ணுக்கு வீட்டு வாடகை ஒப்பந்தம் முடிவதற்கு 2 மாதம் முன்னரே அழைத்து வீட்டு வாடகையை உயர்த்துவதாக அறிவித்த வீட்டு ஓனர், உயர்த்தப்பட்ட வாடகையை ஒப்பந்த காலம் முடியும் வரையில் கொடுக்க முடியாது என கூறினார். இதனால் வீட்டு ஓனர் தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து மிரட்டி வருகிறார்.
மேலும் முபையில் 32 வயதான நபர் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் ஒரு நாள் கெடு கொடுத்து வீட்டை காலி செய் அல்லது தற்போதைய 22000 வாடகையை 35000 ஆக கொடு என நிர்பந்தம் செய்துள்ளார். இதனால் பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து, அதாவது கொரோனா தொற்று காலத்தில் அறிவிக்கபட்ட வொர்க் ப்ரம் ஹோம் ஆகியவை ரத்து செய்யப்பட்ட பின்பு, இந்தியாவில் வீட்டு வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது. பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் நொய்டா போன்ற முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை 40-50% வரை உயர்ந்துள்ளது.

வீட்டு வாடகை பெரிய அளவில் அதிகரிக்க முக்கியமான காரணம் கொரோனா தொற்று காலத்தில் மக்கள் நகரங்களில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் பெரும் நகரங்களில் அதிகப்படியான வீடுகள் காலியானது. இதன் பின்பு வொர்க் ப்ரம் ஹோம் கட் செய்யப்பட்ட உடன் மொத்த மக்களும் ஓரே நேரத்தில் நகர்களுக்கு வந்தனர்.
இதனால் திடீரென சப்ளை டிமாண்ட் உருவாகி தற்போது வீட்டு வாடகை அதிகரித்துள்ளது. இதை பார்த்து கடந்த 2 வருடத்தில் வீட்டு வாடகையை உயர்த்தாத வீட்டு ஓனர்கள் சந்தையின் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப வாடகையை அதிரடியாக உயர்த்தினர்.
வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் குத்தகை ஒப்பந்தம் குறித்த நிச்சயமின்மை வாடகை வாட்டில் குடியிருப்போருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications