பெங்களூரில் விண்ணை பிளக்கும் வாடகை.. 2BHK வீட்டுக்கு மாதம் ரூ.70000.. அட கொடுமையே..!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் வீட்டு வாடகைகளின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் இதற்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய இளைஞர்களே காரணம் என ரெடிட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூர் நகரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவின் ஸ்டார்ட் தலைநகரமாகவும் இது இருக்கிறது. ஐடி ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெங்களூரு நகரில் வாடகை வீடுகளுக்கான தேவையும் வீடுகளின் வாடகையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

பெங்களூரில் விண்ணை பிளக்கும் வாடகை.. 2BHK வீட்டுக்கு மாதம் ரூ.70000.. அட கொடுமையே..!!

இந்த சூழலில் ரெட்டிட் தளத்தில் வெளியாகியுள்ள ஒரு பதிவில் பெங்களூரு நகரில் பணிபுரியும் இளம் டெக் தொழில் நிபுணர்கள் தான் வீடுகளின் வாடகை பல மடங்கு உயர்வதற்கு காரணம் என ஒரு பயனாளர் குறை கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு ரெடிட் தளத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

"பெங்களூருவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனை உருவாகி வருகிறது குறிப்பாக அதிக சம்பளத்தில் வேலைக்கு வந்திருக்கக்கூடிய இளம் தொழில் நிபுணர்கள் வீட்டு வாடகைகளின் மதிப்பை பல மடங்கு உயர்த்தி விட்டனர்" என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

மாதத்திற்கு 1.5 லட்சம் முதல் 2.5 இலட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கக்கூடிய இளம் தொழில் நிபுணர்கள் 50 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை வாடகை செலுத்துவதற்கு முன் வருகின்றனர். இதனால் பெங்களூரு வீட்டு உரிமையாளர்களும் வாடகைகளை பல மடங்கு உயர்த்தி விட்டனர் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சாதாரண சம்பளம் ஈட்ட கூடிய நபர்கள் பொருத்தமான வாடகைக்கு வீடு கிடைக்காமல் தவிக்கின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இதுதான் தற்போதைய நிலைமை என தங்களுடைய அனுபவங்களை பலரும் ரெடிட்டில் இந்த பதிவின் கீழ் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் எலக்ட்ரானிக் சிட்டியில் நான் வேலை செய்கிறேன் இங்கே இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டின் வாடகை 15 ஆயிரம் ரூபாய் அதுவே என்னுடன் பணிபுரியக்கூடிய மற்றொரு நபர் கோரமங்களாவில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டிற்கு 35 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்துகிறார் என கூறியுள்ளார்.

இளம் தொழில் நிபுணர்கள் வீட்டு உரிமையாளர்கள் எவ்வளவு தொகையை வாடகையாக கூறினாலும் அதனை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர் அதுவே வாடகை உயர்வதற்கு பெருமளவில் காரணமாக இருக்கிறது என ஒரு பயனர் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் கோரமங்களா, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை சுமார் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+