பெங்களூருவில் வேலை கூட கிடைச்சிடும்.. ஆனா இது மட்டும் கிடைக்கவே கிடைக்காது..!!

இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம், சிலிக்கான் வேலி என புகழ்பெற்றது பெங்களூர் நகரம். பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் பெங்களூருவில் தான் இருக்கின்றன. பல்வேறு தொழில்முனைவோரு போட்டி போட்டுக் கொண்டு பெங்களூருவில் தான் தங்களுடைய ஸ்டார்ட் அப்களை அமைக்கின்றன.

ஐடி துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஒரு மையமாக பெங்களூரு தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புக்காகவும் தொழில் ரீதியாகவும் பெங்களூருக்கு வருகை தருகிறார்கள். ஆனால் இவ்வாறு வரக்கூடியவர்கள் பெங்களூருவில் சந்திக்கக்கூடிய பிரதான பிரச்சனைகளாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. தற்போது அதோடு புதிய பிரச்சனை ஒன்றும் சேர்ந்திருக்கிறது.

பெங்களூருவில் வேலை கூட கிடைச்சிடும்.. ஆனா இது மட்டும் கிடைக்கவே கிடைக்காது..!!

பெங்களூருவில் ஐடி துறை வளர்ச்சிக்கு ஏற்ப ரியல் எஸ்டேட் துறையும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பெங்களூர் நகரில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளில் எல்லாம் வீட்டு வாடகைகளின் மதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் குறைந்த வாடகையில் வீடு கிடைப்பது என்பது அங்கே குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது. கணவன் மனைவி என இரண்டு பேரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து ஒரு கணிசமான அளவு சம்பளம் பெறுகிறார்கள் எனும்போது அவர்களுக்கு பிரச்சனை இல்லை.

ஆனால் முதன்முறையாக வேலை கிடைத்து பெங்களூர் நகரத்திற்கு வருபவர்களுக்கு அத்தனை எளிதாக குறைந்த வாடகைக்கு தங்குமிடங்கள் கிடைப்பது கிடையாது. அந்த வகையில் பெங்களூருவில் வீடு தேடி சலிப்படைந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பதிவிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது. ராஜேஸ்வரி குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்க கூடிய வீடியோவில் நான் தற்போது பெங்களூரில் வீடு தேடிக் கொண்டிருக்கிறேன் ஆனால் என்னுடைய பட்ஜெட்க்கு இங்கு வீடு கிடைக்கவில்லை என கூறியிருக்கிறார்.

தற்போது நான் குடியிருக்கும் வீட்டில் இருந்து அடுத்த 20 நாட்களுக்குள் காலி செய்தாக வேண்டும். 15000 ரூபாய் வாடகையில் ஒரு படுக்கை அறை கொண்டு வீட்டினை தேடி வருகிறேன் ஆனால் எனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்திருக்கிறார். ஹெச்எஸ்ஆர் லே அவுட் பகுதியில் நான் வீடு தேடுகிறேன். இங்கே ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை 25,000 ரூபாயிலிருந்து தான் தொடங்குகிறது என்றும் கூறியிருக்கிறார். இதுவே ஃபுல் ஃபர்னிஸ்டு வீடு என்றா வாடகை 50,000 ரூபாய் வரை செல்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

இது தவிர செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில் பல லட்சங்களை கேட்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பெங்களூருவில் வேலை கூட ஈஸியாக கிடைக்கும் ஆனால் நம் பட்ஜெட்டிற்கு வீடு கிடைப்பது தான் கஷ்டம் என பலரும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+