பெங்களூரு ரியல் எஸ்டேட் கிடுகிடு.. இனி வீடு வாங்குவது வெறும் கனவுதான் போலையே!

அனராக் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி அதிகரித்த தேவை காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் குடியிருப்பு சொத்துகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நகரங்களில் பெங்களூர் முன்னணியில் உள்ளது. 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் குடியிருப்பு சொத்துகளின் விலைகள் இங்கு 94 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

பெங்களூரில் சராசரி சொத்து விலை 2019 ஆம் ஆண்டில் ஒரு சதுர அடி 4,300 ஆக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டின் நாட்டில் 8151 ரூபாயாக அதிகரித்துள்ளது. 2019 முதல் 2024-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் 17,605 புதிய குடியிருப்பு சொத்துக்கள் பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை 40 லட்சத்திலிருந்து 1.5 கோடி வரையிலான சொத்துகள் ஆகும்.

 பெங்களூரு ரியல் எஸ்டேட் கிடுகிடு.. இனி வீடு வாங்குவது வெறும் கனவுதான் போலையே!

ஹைதராபாத்தின் கோகபெட், கடந்த 5 ஆண்டுகளில் 89% விலை உயர்வுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பகுதியில் சராசரி வீட்டு விலை 2019-ஆம் ஆண்டில் 1 சதுர அடி ரூ. 4,750 ஆக இருந்தது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ. 9,000 ஆக உயர்ந்துள்ளது. இங்கு சுமார் 12,920 புதிய வீட்டு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவை ரூ. 2.5 கோடிக்கும் அதிகமான பிரீமியம் வீடுகளாகும்.

பெங்களூரின் வைட்ஃபீல்டு 80% விலை உயர்வுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு சராசரி வீட்டு விலை 2019-ஆம் ஆண்டில் 1 சதுர அடி ரூ. 4,765-ஆக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ. 8,600 ஆக உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் மொத்தம் 18,600 வீட்டு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

என்சிஆரின் துவாரகா எக்ஸ்பிரஸ்வே நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை சுமார் 79 சதவீத விலை ஏற்றத்தை கண்டுள்ளது. இந்த பகுதியில் 2019-ஆம் ஆண்டில் ஒரு சதுர அடி 5,359 ரூபாயாக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 9,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பெங்களூரின் சர்ஜாப்பூர் சாலையில் சொத்து விலை 58% விலை உயர்வுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு சராசரி விலைகள் 2019-ஆம் ஆண்டில் ஒரு சதுர அடி ரூ. 5,870-லிருந்து 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ. 9,300 ஆக உயர்ந்துள்ளது.

ஹைதராபாத்தின் பாச்சுபல்லி 57% விலை உயர்வுடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு சராசரி விலைகள் 2019-ஆம் ஆண்டில் ஒரு சதுர அடி ரூ. 3,690-த்திலிருந்து 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ. 5,800 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆய்வு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சொத்து விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது. பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவை முன்னணியில் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+