பொதுவாக வேலை, தொழில் காரணமாக இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்குச் சென்றவர்கள், இந்தியாவையும், இந்திய அமைப்புகளையும் குறை கூறுவது வழக்கமான ஒன்று, ஆனால் இன்று காலம் மாறியுள்ளது வெளிநாடுகளுக்கு இணையாகக் கட்டமைப்பு, வாய்ப்புகள், வசதிகள் இந்தியாவில் உருவாகியுள்ளது.
அப்படி ஹர்தீப் கம்பீர் என்ற தொழிலதிபர், வேலைவாய்ப்பு, வர்த்தகம் என தனக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான பே ஏரியாவுக்குச் சென்றார். இந்த நிலையில் தற்போது இந்தியாவின் டெக் நகரமான பெங்களூரில் ஸ்டார்ட்அப் இன்குபேட்டரைத் தொடங்க இதுவரை அவர் செல்லாத பெங்களூரு-க்கு முதல் முறைாக வந்துள்ளார்.

இவருடைய பெங்களூர் அனுபவத்தையும், அமெரிக்காவுக்கு இணையான இந்தியா எப்படியெல்லாம் வளர்ந்துள்ளது என்பதைத் தனது டிவிட்டர் பதிவு வாயிலாகத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு பலரையும் கவர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் பெங்களூர் ஸ்டார்ட்அப் சமூகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
X பதிவில் ஹர்தீப் கம்பீர், பெங்களூரு சான் பிரான்சிஸ்கோவை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை தனது சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரில் தரையிறங்கியது முதல் துவங்கியுள்ளார்.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் "Uber Zone" அமைப்பு என்னைக் கவர்ந்தது. Uber டாக்சியை புக் செய்து அதைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் Uber ஐ முன்பதிவு செய்து வரிசையில் உள்ள முதல் கருக்கு சென்று, உங்கள் பின்னை டிரைவரிடம் சொல்லிவிட்டு, நீங்கள் கிளம்பிவிடலாம். காத்திருக்கத் தேவையில்லை. என்று ஒவ்வொரு அனுபவத்தையும் தொகுத்துள்ளார்.
பெங்களூர் கர்நாடக மாநிலத்தில் இருப்பதால் ஹிந்தியை வைத்து தான் சமாளிக்க வேண்டும் என எதிர்பார்த்த எனக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியான விஷயம், ஆட்டோ டிரைவர் ஆங்கிலத்தில் பதிலளித்தபோது ஏற்பட்டது. "இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ள நகரம் பெங்களூர். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, "என்று அவர் குறிப்பிட்டார்.
கம்பீர் பெங்களூரின் எச்எஸ்ஆர் லேஅவுட்டை சான் பிரான்சிஸ்கோவின் ஹேய்ஸ் வேலி உடன் ஒப்பிடுகிறார். "பெங்களூர் ஸ்டார்ட்அப் எகோசிஸ்டத்திற்குள்ள நீங்கள் நுழைந்தவுடன், பிரபலமான இடங்களில் பலரை அடிக்கடி சந்திக்கத் வாய்ப்பு கிடைக்கும். இதில் பெரும்பாலானோர் பெரும் திறமையாளர்கள். ஒரு மாதத்தில், சில நம்பமுடியாத பில்டர்களை நான் இங்கு சந்தித்தேன், "என்று அவர் கூறினார்.
இதேபோல் சான்பிரான்சிஸ்கோவில் மாதம் 2500 டாலர் செலவாகும் வேளையில் பெங்களூரில் 900 டாலர் மட்டுமே செலவாகிறது, இதை போல் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டெலிவரி சேவை இரவு 2.33 மணிக்கு ஆர்டர் செய்தால் 2.37 மணிக்கு வீட்டுக்கு வந்து விட்டது. டெலிவரி சார்ஜ் வெறும் 0.03 டாலர் மட்டுமே.

இண்டர்நெட் டேட்டா கட்டணம் மிகவும் சீப், யூலு பைக், பெங்களூர் கிளைமேட், HSR பகுதியில் பாதுகாப்பு குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பு என சின்ன சின்ன விஷயத்தையும் பாராட்டித் தள்ளியுள்ளார் ஹர்தீப் கம்பீர்.
இதேவேளையில் பெங்களூரில் சில தொல்லைகளும் உண்டு, கொசு, வீட்டு உரிமையாளர்கள் அதிகப்படியான டெபாசிட் தொகையைக் கேட்பது போன்றவற்றைத் தொல்லையாக குறிப்பிட்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ போல் ஒரு ஸ்டார்ட்அப் எகோசிஸ்டம் வேண்டுமெனில் கட்டாயம் பெங்களூர்-க்கு வரலாம். சொல்ல மறந்துவிட்டேன் உபர் இங்கு செம சீப் என ஹர்தீப் கம்பீர் பதிவு முடிகிறது.


Click it and Unblock the Notifications