புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..?!

கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பில் இருந்து இந்தியா வேகமாக மீண்டும் வரும் வேளையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு மற்றும் பணி அமர்த்தல் நிறுவனமான டீம்லீஸ், இந்தியாவில் அதிகம் வேலைவாய்ப்பை உருவாக்கும் பெரும் நகரம் எது என ஆய்வு நடத்தியுள்ளது.

ஐடி சேவை, சேல்ஸ், உற்பத்தி

ஐடி சேவை, சேல்ஸ், உற்பத்தி

இந்தியாவில் தற்போது ஐடி சேவை, சேல்ஸ் மற்றும் உற்பத்தித் துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. ஐடி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அதிகளவிலான வர்த்தகம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் காரணத்தால் போதுமான ஊழியர்கள் இல்லாமல் தவித்து வருகிறது.

உற்பத்தித் துறை

உற்பத்தித் துறை

இதேபோல் உற்பத்தி துறையில், குறிப்பாக டெக்ஸ்டைல் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனைக்குத் தயாராகி வரும் காரணத்தால் உற்பத்தித் துறையும் சூடுப்படிதித்துள்ளது.

டீம்லீஸ் ஆய்வு

டீம்லீஸ் ஆய்வு

இந்தச் சூழ்நிலையில் டீம்லீஸ் செய்த ஆய்வில் இந்தியாவில் அதிகம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெரு நகரங்கள் பட்டியலில் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, சண்டிகர் ஆகியவை முன்னணி இடங்களைப் பிடித்துள்ளது.

சென்னை இப்பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

டெக் துறை

டெக் துறை

பொதுவாகவே இந்தியா முழுவதும் தற்போது சேல்ஸ் மற்றும் டெக்னாலஜி பிரிவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. குறிப்பாக டீப் டெக் பிரிவில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இதேபோல் தற்போது டெக் துறையில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் நிலையில் அதிகச் சம்பளத்தை நிறுவனங்கள் அளிக்கத் தயாராக உள்ளது.

ஐடி, ஈகாமர்ஸ், ஹெல்த்கேர், எட்டெக்

ஐடி, ஈகாமர்ஸ், ஹெல்த்கேர், எட்டெக்

இக்கொரோனா காலத்தில் ஐடி, ஈகாமர்ஸ், ஹெல்த்கேர், எட்டெக் ஆகிய துறைகள் அதிகளவில் பாதிக்காமல் உள்ளது என டீம்லீஸ் நிறுவனம் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் வங்கியியல், நிதியியல், இன்சூரன்ஸ், டெலிகாம், உற்பத்தி மற்றும் இன்ஜினியரிங் துறைகள் சரிவில் இருந்து வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+