பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் டி.தேவராஜ அர்ஸை கவுரவிக்கும் வகையில், பெங்களூரில் முக்கிய தகவல் தொழில்நுட்ப ஹப் ஆக விளங்கும் எலக்ட்ரானிக் சிட்டிக்கு விரைவில் இவரின் பெயரை சூட்டி பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த வாரம் நடந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பெங்களூரின் முக்கிய அடையாளமாகவும், தெற்கு பெங்களூரில் அதிகம் வேலைவாய்ப்புகளையும், வர்த்தகத்தை உருவாக்கக்கூடிய பகுதியாக விளங்கும் எலக்ட்ரானிக் சிட்டிக்கு விரைவில் புதிய பெயர் மாறப்போகிறது.

விதான சவுதாவின் விருந்து மண்டபத்தில் நடைபெற்ற தேவராஜ ஊர்ஸ் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "தேவராஜ அர்ஸ் பெயரில் எலக்ட்ரானிக் சிட்டி பெயர் மாற்றப்படும் என்று நான் முன்பே அறிவித்திருந்தேன். சில காரணங்களால் இதற்கான பணிகள் தாமதமானது, ஆனால் இனி தாமதமில்லாமல் அடுத்தகட்ட பணிகளை துவங்க உள்ளோம், விரைவில் தேவராஜா அர்ஸ் எலக்ட்ரானிக் சிட்டி என பெயர் மாற்றம் செய்வோம் என சித்தராமையா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மேலும் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தேவராஜ அர்ஸ் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், அவர் பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானவர் என்று பேசிய அவர் இதுகுறித்து விரைவில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வோம் என்றும் கூறினார்.
எலக்ட்ரானிக் சிடடி இந்தியாவின் முதன்மை தகவல் தொழில்நுட்ப ஹப் ஆக உள்ளது. இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல முன்னணி ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களும், கல்லூரிகளும் இந்த தொழிற்துறை பகுதியில் உள்ளது.
1970 களில் தான் கர்நாடக அரசு பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி நிறுவியது, இந்த ஒரு விஷயத்தாலேயே பெங்களூர் நாட்டின் ஐடி தலைநகராக உயரும் பயணம் துவங்கியது என்றால் மிகையில்லை. பெங்களூர் நாட்டின் ஐடி தலைநகரமாக உயர்ந்து தற்போது கர்நாடகாவில் மட்டும் சுமார் 5,500 க்கும் மேற்பட்ட IT/ITES நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
தற்போது எலக்ட்ரானிக் சிட்டி என அழைக்கப்படும் இந்த பகுதி 1970 - 80களில் Keonics Electronic City என்று அழைக்கப்பட்டது. 1978ல் கர்நாடக அரசு இப்பகுதி நிலத்தை வாங்கி கியோனிக்ஸ் எலக்ட்ரானிக் சிட்டி ஆக உருவாக்கியது. 1980 வரையில் இப்பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தான் அதிகமாக இருந்தது.
1990களில் தாராளமயமாக்கல் கொள்கை-க்கு பின்பு Keonics Electronic City, எலக்ட்ரானிக் சிட்டி ஆக மாறிய இன்போடிஸ் முதல் சீமென்ஸ் வரையில் பல டெக் நிறுவனங்கள் வந்தது மூலம் Electronic City பகுதி ஒரு ஐடி ஹப் ஆக மாறியது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications