இந்திய மக்களை பொருத்த வரையில் அதிகம் சம்பளம் வாங்குவோர் பட்டியலில் எப்போதும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இருக்கும் நிலையில் தற்போது ஐடி ஊழியர்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.
பிற துறைகள் போல் அல்லாமல் ஐடி துறை பொருத்த வரையில் வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் அதிகப்படியான வர்த்தகம் செய்யும் காரணத்தால் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்குக் கூடுதலான சம்பளம் கொடுப்பது வாடிக்கை.
ஆனால் சர்வதேச அளவில் பார்த்தால் ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கொண்ட நகரங்களில் டாப் 10 பட்டியலில் ஒரு இந்திய நகரம் கூட வரவில்லை, ஆனால் 11 வது இடத்தில் பெங்களூர் இடம்பெற்றுள்ளது. அப்போ சென்னை..?
சம்பள டிராக்கர்
ஆன்லைன் சம்பள டிராக்கர் நிறுவனமான Level.fyi சாப்ட்வேர் இன்ஜினியர்களின் மீடியன் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசியாவின் முக்கிய நகரங்கள் வாரியாக வருடாந்திர சம்பள அளவுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டி அதிக மீடியன் சம்பளம் கொண்ட ஆசிய நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் இடம்பெற்றுள்ளது.
டாப் 3 நகரம்
டாப் 10 பட்டியலில் இல்லாத பெங்களூர் 11 வது இடத்தைப் பிடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கான சராசரி சம்பளம் 1,59,000 டாலராகும். இதுவே 2வது இடத்தில் இருக்கும் துபாயில் 94000 டாலர், 3வது இடத்தில் இருக்கும் சிங்கப்பூரில் 90000 டாலர்.
70000 டாலர் வித்தியாசம்
முதல் மற்றும் 3வது இடத்தில் இருக்கும் நகரங்களில் மத்தியிலேயே 70000 டாலர் வித்தியாசம் இருக்கும் நிலையில் பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் வருடாந்திர மீடியன் சம்பளம் என்ன தெரியுமா..?
பெங்களூர்
ஆன்லைன் சம்பள டிராக்கர் நிறுவனமான Level.fyi நிறுவன தரவுகள் படி 11வது இடத்தில் இருக்கும் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வருடாந்திர மீடியன் சம்பளம் வெறும் 37000 டாலர் மட்டுமே.
ஆசிய நகரங்கள்
இதேபோல் சீனாவின் ஷாங்காய்-யில் 86000 டாலர், தென் கொரியா நாட்டின் சியோல் நகரில் 83000 டாலர், சீனா பெய்ஜிங்-ல் 79000 டாலர், சீனா-வில் ஷென்சென் நகரில் 77000 டாலர், டோக்கியோவில் 69000 டாலர், தைவான் நாட்டின் Hsinchu நகரில் 69000 டாலர் மீடியன் சம்பளமாக உள்ளது.
சான் பிரான்சிஸ்கோ
ஆசியாவில் அதிகப்படியாக இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் முதல் இடத்தைப் பெற்ற நிலையில் உலகளவில் முதல் இடத்தைப் பெற்றது சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் மீடியன் சம்பளமே 2,34,000 டாலர், இதேபோல் சியாட்டில் நகரில் 2,13,000 டாலர், நியூயார்க் நகரில் 187000 டாலர், சுரிச் 178000 டாலர், லண்டன் 116000 டாலர், டப்ளின் 112000 டாலர்.
சென்னை
இதில் சென்னை எங்கே இருக்கும் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். சென்னை ஆசிய பட்டியலில் 20 இடத்திற்கு மேலே உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஐடி துறையில் அதிகச் சம்பளம் வாங்க வேண்டும் என்றால் அதற்குச் சரியான இடம் பெங்களூர் தான்.


Click it and Unblock the Notifications