டாம் டாம் எனப்படும் நெதர்லாந்து நாட்டின் மேப் மற்றும் லொகேஷன் தொழில்நுட்ப நிறுவனம் சமீபத்தில் போக்குவரத்துக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த டிராபிக் இன்டெக்ஸ் ஆய்வுக்காக டாம் டாம் பல கட்ட ஆய்வுகளைத் தனது சொந்த தொழில்நுட்ப வாயிலாக உலகின் பல நாடுகளில் செய்துள்ளது.
இந்த முக்கியமான ஆய்வில், இந்தியாவில் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் தலைநகரான பெங்களூரு 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரமாக அறியப்படுகிறது. இதேபோல் 2023 ஆம் ஆண்டில் மிகவும் நெரிசலான நகரங்களின் உலகளாவிய தரவரிசையில் பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது. 2022 இல் பெங்களூர் இரண்டாவது இடத்தில் இருந்து குறிப்பிடத்தக்கது.

ஒரு நகரின் போக்குவரத்து நெரிசலை கணக்கிடும் டிராபிக் இன்டெக்ஸ் ஏன் முக்கியமானது, போக்குவரத்து ஒரு நகரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றாலும் அது மலிவானதாகவும், வேகமானதாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் மக்களின் நேரம், பணம் அனைத்தும் வீண். இதைக் கணக்கிடும் முறையாகத் தான் இந்தி டிராபிக் இன்டெக்ஸ் இருக்கிறது.
டாம் டாம் ஆய்வின் படி 2023ல் பெங்களூரில் சராசரியாக 10 கிமீ பயணிக்க 28 நிமிடங்கள் 10 வினாடிகள் தேவைப்படுகிறது. 2022-ல் இது 29 நிமிடங்களில் இருந்த நிலையில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பெங்களூர் சாலையில் வாகன நெரிசல் நேரங்களில் சராசரி வாகனத்தின் வேகம் மணிக்கு 18 கிமீ ஆக உள்ளது
இதன் விளைவாகப் பெங்களூர் மக்கள் ஒரு வாரத்திற்கு 132 மணிநேர போக்குவரத்து நெரிசலில் இழக்கின்றனர். ஆனால் சில்க் போர்ட், மாரத்தஹள்ளி, சர்ஜாபூரா சாலையில் செல்வோருக்கு தான் உண்மையான பயண நேரமும், வலியும் தெரியும்.
2023 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் நெரிசலான நகரங்களில் முதல் இடத்தில் லண்டன் உள்ளது, இந்நகரத்தில் சராசரியாக மணிக்கு 14 கிமீ வேகத்தில் பயணிக்கப்படுவதாக டாம் டாம் ஆய்வு கூறுகிறது. அயர்லாந்தில் டப்ளின் (16 கிமீ மணி), கனடாவில் டொராண்டோ (18 கிமீ மணி), இத்தாலியில் மிலன் ( 17 kmph), மற்றும் பெருவில் Lima (17 kmph) ஆகியவை அடுத்தடுத்து டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது.
பெங்களூரை தொடர்ந்து 7வது இடத்தில் புனேவில் 10 கிமீ பயணிக்க 27 நிமிடம் 50 நொடிகள் தேவைப்படுவதாக டாம் டாம் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. 44வது இடத்தில் டெல்லி, 54வது இடத்தில் மும்பை ஆகியவை உள்ளது. இந்த ஆய்வு 6 கண்டத்தில் 55 நாடுகளில் 387 நகரங்களில் செய்யப்பட்டுத் தகவல்களை வெளியிட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications