இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம், சிலிக்கான் வேலி என பல்வேறு பெயர்களை பெற்றிருக்கிறது பெங்களூர் நகரம். வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு நாளும் பெங்களூருவை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமானவர்கள் வருகை தருகின்றனர்.
மக்கள் வருகை அதிகமாக இருப்பது ஒருபுறம் என்றால் போக்குவரத்து நெரிசல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என பல்வேறு சவால்கள் கர்நாடக அரசுக்கு இருக்கிறது. அதனை விட பெரிய சவால் பெங்களூரு தண்ணீர் பிரச்சினை. ஆண்டுதோறும் பெங்களூருவில் கோடை காலங்களில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. கடந்த ஆண்டு கூட கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

நீரை வீணடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூட பெங்களூரு மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பேப்பர் பிளேட் , கப் போன்றவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். பருவமழை பொய்த்தால் பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தண்ணீர் பிரச்சனை தலையாய பிரச்சினையாக இருந்து வரக்கூடிய நிலையில் ஒரு இளைஞரின் சிறிய ஐடியா இந்த தண்ணீர் பிரச்சனைக்கு மிகப்பெரிய தீர்வை தந்திருக்கிறது.
தமிழ்நாடு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே நடைமுறைப்படுத்திய ஒரு திட்டம் தான் மழைநீர் சேகரிப்பு திட்டம். அதாவது மழைநீர் வீணாகமல் நிலத்தில் சென்று கலக்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என அறிவித்தது தமிழ்நாடுஅரசு. இது நிலத்தடி நீரை மேம்படுத்த பெரிய அளவில் உதவியது.
கணேஷ் ஹான் பாக் என்பவர் தமிழ்நாட்டை பின்பற்றி பெங்களூருவில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கோடைகாலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என முன்மொழிந்தார். தொடக்கத்தில் இவருடைய யோசனையை யாரும் ஏற்கவில்லை. இது மிகவும் சிக்கலான ஒன்று, இதற்காக நாம் அதிக செலவு செய்ய வேண்டும் என பலரும் எதிர்ப்பு தான் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கணேஷ் அவர்கள் அனைவரும் கூறியது தவறு என்பதை நிரூபித்து காட்டினார்.

முதலில் தன்னுடைய வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் இருப்பவர்களிடம் அழைத்து பேசி மழைநீர் சேகரிப்பு எப்படி செயல்படுகிறது அதன் முக்கியத்துவம் என்ன, இது எப்படி நம்முடைய தண்ணீர் பிரச்சனையை போக்கும் என எடுத்துரைத்தார். முதல் கட்டமாக 100 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கிய பகுதியில் இந்த மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தினார். 3 லட்சம் ரூபாய் செலவிலேயே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி தந்தார்.
இதன் காரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு 2 மாதங்களில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டிய தேவை குறைந்ததால், இதனால் 2 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடிந்தது. அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரத் தொடங்கியது. கணேஷின் இந்த வெற்றியை தொடர்ந்து ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்களுடைய பகுதிகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். கிட்டத்தட்ட 300 பெங்களூர் கேட்டட கம்யூனிட்டிகளில் கணேசன் முயற்சியால் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்காக தான் எந்த ஒரு கட்டணமும் கேட்பதில்லை என தெரிவிக்கும் கணேஷ் கட்டுமான பணிகளுக்காக மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் அதை மட்டும் கொடுத்தால் போதும் என்கிறார்.
மழை நீர் வீணாகாமல் நிலத்தடியில் அதற்கான ஸ்டோரேஜ் டேங்குகளை கட்டி அதில் சேமித்து வைக்கிறார்கள். இந்த தண்ணீர் பல கட்டங்களாக வடிகட்டி இந்த சேமிப்பு டேங்குகளில் சேகரிக்கப்படுகிறது. இதில் நிரம்பியது போக மீதமுள்ள தண்ணீர் நேரடியாக நிலத்திற்கு செல்லும் வகையில் வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications