இந்தியாவின் ஸ்டார்ட் தலைநகரம் இந்தியாவின் சிலிக்கான் வேலி என புகழ்பெற்ற பெங்களூரு நகரம் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெங்களூர் நகரின் தொழில்நுட்ப பூங்காக்கள் அனைத்தும் ஒரே நாள் இரவில் ஏரிகளாக மாறி இருக்கின்றன.
பெங்களூரு நகரில் பெய்த கனமழை காரணமாக நகரமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து இருக்கிறது. மக்களை மீட்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது அதேவேளையில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பெங்களூரு வாசிகள் பலரும் பெங்களூரு என்னும் பிராண்ட் தற்போது கேள்விக்குறியாகி இருப்பதாக பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் செயல்படுகின்றன கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் இந்த தொழில்நுட்ப பூங்காக்கள் எல்லாம் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் சாலைகளே தெரியவில்லை அந்த அளவிற்கு மழைநீர் தேங்கி இருக்கிறது. வாகனங்கள் மழை நீரில் மூழ்கடிக்கப்பட்டு இருக்கின்றன . பல பகுதிகள் ஏதோ பேரிடர் ஏற்பட்ட பகுதிகளை போல காட்சி தருவதாக மக்கள் கூறுகின்றனர்.
ஹெச் எஸ் ஆர் லேஅவுட் பகுதியில் வாழ்க்கையே ஸ்தம்பித்திருப்பதாக மக்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். பெங்களூரு மாநகரம் மழை பாதிப்புகளை தாங்கும் வகையில் கட்டமைக்கப்படவில்லை என பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். டெக் பூங்காக்கள் ஏரிகளாக மாறி இருக்கிறது என கூறுகின்றனர்.
மழை பாதிப்புகளை தாங்கும் வகையில் கட்டமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நகரம் என்ற பெயர் கொண்ட இந்த நகரம் ஒரு மழையால் காணாமல் போய்விட்டது என்றும் கூறுகின்றனர். மூன்று கோடி ரூபாயை கொடுத்து கார் வாங்கும் திறன் கொண்ட ஏராளமான மக்கள் வசிக்கக்கூடிய ஒரு நகரம் ஒரே மழைக்கு திணறுகிறது என ஒரு பயனர் பதிவு செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்பி பிசி மோகன் ஒரு மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையே பெங்களூரு மாநகராட்சி மற்றும் ஆளும் கர்நாடக அரசால் சரி செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார். மழை நீரை வெளியேற்ற முடியவில்லை விழுந்த மரங்களை அகற்ற முடியவில்லை. ஆனால் பெங்களூரு ஆனால் 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு போக்குவரத்து பிரச்சனை தீர்ப்பதற்காக சுரங்கம் அமைக்கப்படுவதாக கூறுகின்றனர் சுரங்கம் எதற்கு இந்த மழை நீரை தேக்கி வைப்பதற்கான நீர் தேக்கமாக மாறுவதற்கு என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பெங்களூரு நகரம் பெரிய பெரிய நிறுவனங்களை எல்லாம் கட்டமைப்பதில் பிஸியாக இருக்கிறதே தவிர சாலைகள் எல்லாம் ஏரிகளாகவும் ஆறுகளாகவும் மாறி வருவதை கவனிக்க தவறிவிட்டது என ஒரு நபர் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications