பெங்களூர்: இந்தியாவில் புதிய "சிலிக்கான் வேலி" அமைப்போம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முக்கியமான திட்டத்தை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் வேளையில், இதற்கு கர்நாடக மாநிலத்தின் வர்த்தகம், தொழில்துறை, உள்கட்டமைப்பு துறை அமைச்சர் MB பாட்டீல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரின் திட்டத்தை விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், நாம் நமக்கு சொந்தமாக ஒரு சிலிக்கான் வேலியை உருவாக்க வேண்டும். இதற்காக தேசிய தொழில்துறை வழித்தடம் மேம்பாட்டு நிறுவனம் (NICDC) உடன் இணைந்து நாட்டின் தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இன்னோவேட்டார்ஸ் மற்றும் வழக்கத்தை மாற்றும் திறன் கொண்டு நிறுவனங்களான Disruptors-காக முழுமையான புதிய டெக் நகரத்தை 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

பியூஷ் கோயல் கருத்துக்குப் பதில் கூறும் வகையில் கர்நாடக அமைச்சர் MB பாட்டீல் "பெங்களூர் இந்தியாவிலேயே உள்ளது. இந்தியா என்பது நம் நாடு. நாம் நமக்குச் சொந்தமாக ஒரு சிலிக்கான் வேலியை உருவாக்க வேண்டும் என்று பேசியது ஏற்க முடியாது. பெங்களூர் ஒரு நாளில் கட்டப்படவில்லை; பல தசாப்தங்கள், நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டது.
இரவோடு இரவாக சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை நீங்கள் கட்டலாம், ஆனால் ஒரு எகோசிஸ்டத்தை உருவாக பல தசாப்தங்கள் ஆகும். பெங்களூர் இந்தியாவின் அறிவு சுற்றுச்சூழலின் மையமாகும்" என்று அமைச்சர் எம்பி பாட்டீல் X தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் எம்பி பாட்டீல், "கோயல் தனது அலுவலகத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி பெங்களூரை உலக நகரமாக மேம்படுத்த உதவ வேண்டும். மேலும் KHIR நகரத்தை உலகளாவிய இலக்காக மாற்ற உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் சிறப்புமிக்க திட்டமான அறிவு, சுகாதாரம், புதுமை மற்றும் ஆராய்ச்சி (KHIR) நகரம், பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள தாபஸ்பெட் மற்றும் தொடபள்ளாபுர் இடையே அமைக்கப்பட உள்ளது.
இந்த நகரத்தில் சுகாதாரம், புதுமை மற்றும் அறிவுத் துறைகளில் சுமார் ரூ.40,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 80,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு நகரத்தில் போக்குவரத்து, செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ் மெட்டிரீயல்ஸ், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பம், உயிரியல் அறிவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications