பெங்களூரு: இந்தியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களூருவும் இடம் பிடித்திருக்கிறது. நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. சில குடியிருப்புகளின் விலை அதன் உரிமையாளர்கள் வாங்கிய விலையை விட இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.
தற்போது பெங்களூரு விற்பனையாளர்களுக்கான சந்தையாக மாறிவிட்டது என ரியல் எஸ்டேட் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். வாங்கியதை விட வீட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கிறது என எண்ணும் உரிமையாளர்கள் அவற்றை விற்பனை செய்து அந்த பணத்தை அதிக டிமாண்ட் இருக்கக்கூடிய பகுதிகளில் மறு முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் என அறிவுரை வழங்குகின்றனர்.

வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு சரியான நேரம் இது எனக் கூறும் அனுரெட்டி ரியாலிட்டி நிறுவனத்தின் கிரண் குமார் பெங்களூரு தற்போது விற்பனையாளர்களுக்கான சந்தையாக மாறி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். தற்போது ரியல் எஸ்டேட் விலை உச்சத்தை அடைந்து வருவதை பயன்படுத்திக் கொண்டு உரிமையாளர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.
பெங்களூருவில் தற்போது பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும் என அறிவித்ததால் பலரும் மீண்டும் பெங்களூருக்கு நோக்கி வருகின்றனர். அவர்கள் சொந்தமாக வீடுகளை வாங்க முற்படுகின்றனர் என கூறுகிறார் . இவ்வாறு வீடுகளை வாங்க முன்வருபவர்கள் ஏற்கனவே வாங்கி பயன்படுத்தும் வீடுகளை வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர் என்றும் கூறுகிறார். இதன் காரணமாக பெங்களூரு ரியல் எஸ்டேட் சந்தை seller marketஆக இருக்கிறது என தெரிவிக்கிறார்.
நைட் பிராங்க் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவிலேயே ஜனவரியில் இருந்து மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் மட்டும் பெங்களூரு நகரில் வீடுகளின் விலை ஒரு சதுர அடி 16 சதவீத வரை உயர்ந்திருப்பதாக கூறுகிறது. 2021 ஆம் ஆண்டில் தேவனஹள்ளி பகுதியில் ஒரு சதுர அடி 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் மதிப்பு 7000 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது என கூறுகிறார்.
ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு தற்போது இரண்டு கோடியாக உயர்ந்திருக்கிறது என தெரிவிக்கிறார். அதேபோல இந்திரா நகர், கோரமங்களா உள்ளிட்ட அதிக டிமாண்ட் இருக்கும் பகுதிகளில் எல்லாம் குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய்க்கு தான் எதிர்பார்க்கும் வகையிலான குடியிருப்புகள் கிடைக்கின்றன எனக் கூறுகிறார்.
ஏற்கனவே வீடு வாங்கியவர்கள் தற்போது அவற்றை விற்பனை செய்து பணமாக்குவதற்கு சிறந்த தருணம் எனக் கூறும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் அந்த பணத்தை கொண்டு பெங்களூருவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளில் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கின்றனர். உதாரணமாக தேவனஹள்ளி, சர்ஜாபூர் ஆகிய பகுதிகளில் எல்லாம் தற்போது வீட்டுமனைகளின் விலையும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் நன்றாக உயர்ந்து வருகிறது அடுத்த சில ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இவற்றின் விலை உச்சம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளது எனவே இந்த பகுதிகளில் முதலீடு செய்யலாம் என கூறுகின்றனர்.
நீலமங்கலம் பகுதிகளிலும் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குகின்றனர். மேலும் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் இடம் பற்றிய அறிவிப்பு வெளிவந்தால் அந்த பகுதியிலும் முதலீடு செய்யலாம் என்று கூறுகின்றனர்.
More From GoodReturns

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications