பெங்களூர்: சர்வதேச அளவில் ஏஐ (AI) எனப்படும் செயற்கை தொழில்நுட்பத் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் ஏஐ சார்ந்த நிறுவனங்கள் பெருகி வருகின்றன. அந்த வகையில் பெங்களூர் ஏஐ நகரமாக மாறி வருகிறதா எனக் கூறும் வகையில் ஒரே கட்டடத்தில் 5 ஏஐ ஸ்டார்ட் அப்கள் செயல்படுவது தெரியவந்துள்ளது.
பெங்களூர் நகரம் ஸ்டார்ட் அப் சிட்டி என அழைக்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களும் வந்து தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல்கள் அங்கு நிலவுவதாக கருதப்படுகிறது. எனவே பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் பெங்களூர்வில் அலுவலகத்தை அமைத்து செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூர்வில் ஒரே கட்டடத்தில் 5 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுவது தெரிய வந்துள்ளது. பெங்களூர் ஹெச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் உள்ள அர்பன் வால்ட் என்ற கட்டடத்தில் Factors AI என்ற ஸ்டார்ட் அப் செயல்படுகிறது.
அதன் துணை நிறுவனர் தங்கள் நிறுவனம் அமைந்துள்ள கட்டடத்தில் 5 செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் செயல்படுவதாக கூறி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் படி அந்த கட்டடத்தின் தரை தளத்தில் Loop AI நிறுவனம், முதல் தளத்தில் Factors AI நிறுவனம், இரண்டாவது தளத்தில் Raga AI நிறுவனம், மூன்றாவது தளத்தில் Frinks AI நிறுவனம், நான்காவது தளத்தில் Actyv AI என ஐந்து ஸ்டார்ட் அப்கள் செயல்படுகின்றன. இதனை ஹெச்எஸ்ஆர் வைப் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பெங்களூர் வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பலரும் பெங்களூர் ஏஐ நகரமாக மாறி வருகிறது என கூறுகின்றனர். ஒரு பயனர் இது "Building AI" என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் இந்தியாவின் ஏஐ தலைநகரம் பெங்களூர் என கூறியுள்ளார். ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி என்ற ஜெனரேட்டிவ் ஏஐ தளத்தை அறிமுகம் செய்தது.
இதனை அடுத்து பல்வேறு துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் என்பது தொடர்ந்து வருகிறது. கூகுள் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது முழுக்க முழுக்க தங்களது கவனத்தை செயற்கை நுண்ணறிவு பக்கமே வைத்துள்ளன. எனவே அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையக்கூடிய துறையாக ஏஐ தொழில்நுட்பம் இருக்கப் போகிறது. அண்மையில் கூட ஒரு ஆய்வறிக்கையில் இந்தியாவிலுள்ள 10இல் 9 தொழில்கள் தங்கள் செயல்பாடுகளை ஏஐ-உடன் ஒருங்கிணைக்கப்பதாக தகவல்கள் வெளியாகின.
Story written by: Devika
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications