இந்திய ஐடி வர்த்தக சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தில் இருந்து தற்போது நிதானமாக பயணிக்க துவங்கியுள்ளது, புதுபுது ஐடி வர்த்தகங்கள் கிடைக்க துவங்கியுள்ளது. ஆனாலும் ஐடி சேவை துறையில் வேலைவாய்ப்புகளும், ஆட்சேர்ப்பு பணிகளும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.
ஜூன் காலாண்டில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் தற்போது ஐடி பணியில் இருப்போருக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை, ஆனால் புதிதாக பணியில் சேர திட்டமிடுவோருக்கு அதாவது பிரஷ்ஷர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனங்களிடம் பிரஷ்ஷர்களின் ஆட்சேர்ப்பு குறித்து முக்கியமான ஆய்வு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதம் குறித்து வருடத்தின் துவக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட போது சுமார் 75 சதவீதம் பேர் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்தனர். இதே ஆய்வு 2வது பாதிக்காக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
நடப்பு ஆண்டின் 2வது 6 மாத காலத்தில் 65 சதவீத பெங்களூர் நிறுவனங்கள் மட்டுமே பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க உள்ளதாக திட்டமிட்டு உள்ளது என டீம்லீஸ் குரூப்-ன் கிளை நிறுவனமான டீம் லீஸ் எட்டெக் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகிறது. கிட்டத்தட்ட 10 சதவீத நிறுவனங்கள் பிரஷ்ஷர்களை தேர்வு செய்வதில் விருப்பம் இல்லாமல் உள்ளது.
இதேபோல் போல் Xpheno நிறுவனம் செய்த ஆய்வில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் 2024 ஆம் நிதியாண்டில் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 40 சதவீதம் குறைவான ஊழியர்களை மட்டுமே பணியில் சேர்க்க உள்ளதாக கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் பிரஷ்ஷர்களை கூடுதல் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூர் ஐடி நிறுவனங்கள் தான் பிரஷ்ஷர்களை பணியில் சேர்ப்பதில் 65 சதவீதம் பேர் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது என்றால் மும்பை நிறுவனங்கள் 61 சதவீதம், சென்னை நிறுவனங்கள் 47 சதவீதம் மட்டுமே விருப்பம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications