இந்தியாவின் ஐடி தலைநகராக உள்ள பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றும் ஐடி ஊழியர்கள் அரசுக்கும் தங்கள் நிறுவனத்துக்கும் வொர்க் ஃபிரம் ஹோம் வசதியை ஏற்படுத்தித் தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
தண்ணீர் பிரச்னை தீரும் வரை தாங்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையை மக்கள் வறட்சியாகக் கூறுகின்றனர். பருவமழை இந்த சீசனில் நன்றாகப் பெய்யாததால் காவிரி நிதியில் நீர் குறைந்துவிட்டது.

பெங்களூரு நகரத்துக்கு தினசரி 2,100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் நகரத்துக்கு 1450 மில்லியன் லிட்டர் காவிரி நீர்தான் கிடைக்கிறது. இதனால் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனிடையே பெங்களூருவில் பெரும்பான்மையான போர்வெல்கள் வறண்டுவிட்டன. இதனால் பிரச்னை மேலும் மோசமாகி விட்டது.
பருவமழை பொய்ததால் குடிநீர் பிரச்னை மட்டுமல்லாமல் விவசாயமும் பாதித்துள்ளது.
இதனிடையே எக்ஸ் தளத்தில் நவீன் கொப்பரம் என்ற யூசர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 90 நாட்கள் வொர்க் பிரம் ஹோம் வசதியை அளிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் வேலைக்காக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஊழியர்கள் குடிபெயர்ந்துள்ளனர். இவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் வொர் பிரம் ஹோம் வசதி கிடைத்தால் சொந்த ஊருக்குச் சென்று விடுவார்கள். இதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிக்கலாம் என்றும் நவீன் கொப்பரம் கூறியுள்ளார்.
பெங்களூரு வெதர்மேன் கடந்த வாரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் மார்ச் முழுவதும் மழை பெய்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் நகரின் குடிநீர் பிரச்னை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
பெங்களூரு நகரில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் தண்ணீர் நெருக்கடி, பல மாதங்களாக பெரிய மழை இல்லாததால், கர்நாடக அரசு பருவமழை தொடங்கும் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை பரிசீலிக்க வேண்டிய நேரம் இது" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் எச்எஸ்ஆர் லேஅவுட் குடியிருப்போர் பதிவிட்ட இடுகையில், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அவர்களின் வசதிக்காக தொலைதூரத்தில் வேலை செய்ய அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
பெங்களூருவில் தண்ணீர் நிலைமை மோசமாக இருந்து வருகிறது, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியில், பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் நீச்சல் குளங்களில் குடிநீரைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீச்சல் குளங்களில் குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது என்றும், மீறினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களை சுத்தம் செய்தல், தோட்டம் அல்லது கட்டுமான பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பாஜகவை குற்றம்சாட்டி, பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பாஜக தான் பஞ்சத்தை உருவாக்கியது. பெங்களூருவுக்கு தண்ணீர் வழங்குவதே எங்கள் முன்னுரிமை.
நெருக்கடியை சமாளிக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனக் கூறியுள்ளார். பெங்களூரு முக்கியமாக காவிரி ஆறு மற்றும் நிலத்தடி நீர் ஆகிய இரண்டு ஆதாரங்களில் இருந்து தண்ணீர் பெறுகிறது. குடிநீர் அல்லாத நோக்கங்களுக்காக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்படுகிறது.
குடிநீர் டேங்கர்களுக்கு ரூ.700 முதல் 800 வரை கட்டணம் செலுத்தி வந்த நிலையில், தற்போது ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விலை உயர்ந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தண்ணீர் டேங்கர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படுவதால் கிடைப்பது மிகவும் கடினம். இதற்கிடையில், பணம் பறிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் டேங்கர்களுக்கு கார்ப்பொரேஷன் அதிகாரிகள் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications