இந்தியாவின் பெரு நகரங்களில் வாடகைக்கு வீடு தேடி பிடிப்பது என்பது மிகவும் சவாலான காரியம். இதுவும் பெங்களூரில் வாடகை தாறுமாறாக அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வீட்டு ஓனர்கள் வாடகைக்கு வருபவர்களின் வைக்கப்படும் கண்டிஷன்களை கேட்டால் திக்குமுக்காட வைக்கிறது.
ஒரு வேலைக்காக விண்ணப்பம் செய்ய தேவையான தகுதிகளை விடவும் வீட்டு வாடகைக்கு பெறுவதில் அதிகப்படியான தகுதிகள் தேவைப்படும் நிலை தான் பெங்களூரில் உள்ளது. இதனால் வாடகை வீட்டை பெறுவதில் பெரும் சவால்கள் நிறைந்துள்ளது, இந்த அதிகப்படியான டிமாண்ட்-ஐ டார்கெட் செய்து பல மோசடிகள் தற்போது நடந்து வருகிறது.

பெங்களூரில் வாடகை வீடு தேடுபவர்கள் அதிகளவில் ஆன்லைனில் தான் உள்ளனர் என்பதை மோசடியாளர்கள் கண்டுப்பிடித்த நிலையில். இல்லாத வீட்டுக்கு வியக்க வைக்கும் போட்டோகள் உடன் விளம்பரம் செய்து மிகப்பெரிய மோசடியை செய்கின்றனர். இந்த மோசடி வலையில் சிக்கி பெங்களூர் டெக் ஊழியர் ஒருவர் 1.6 லட்சம் ரூபாயை இழந்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்ன நடந்தது...?
கொல்கத்தாவில் இருந்து வந்த 25 வயது டெக் ஊழியருக்கு பெங்களூரின் முக்கிய பகுதியான Kadubeesanahalli-யில் இருக்கும் முன்னணி ஐடி நிறுவனத்தில் அதிகப்படியான சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் ஜூன் 1 ஆம் தேதி பெங்களூர் அலுவலகத்தில் பணியில் சேர திட்டமிட்டு உள்ள நிலையில் வாடகை வீட்டை தேட முடிவு செய்தார்.
பெங்களூருக்கு வருவதற்கு முன்பாகவே இணையம் வாயிலாக வீட்டை தேட முடிவு செய்தார். தானும், தனது கேர்ள்பிரெண்டும் பெங்களூரில் குடியேற NoBorker தளத்தில் வாடகை வீட்டை தேடி வந்த போது
மாரத்தஹள்ளி-யில் ஒரு வீட்டின் விளம்பரம் பிடித்துப்போக மாதம் வாடகை 25000 ரூபாய் என்றும் 2 மாத வாடகை தொகையை அட்வான்ஸ் ஆக அளிக்க வேண்டும் என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள மொபைல் எண்-க்கு அழைத்து போதும் மறுமுனையில் இருப்பவர் தான் ஒரு ராணுவ அதிகாரி என அறிமுகம் செய்துக்கொண்டு உள்ளார். மாரத்தஹள்ளி தனது அலுவலகத்திற்கு வந்து செல்ல ஏதுவான இடம் என்பதால், கொல்கத்தாவில் இருந்துக் கொண்டே பெங்களூர் வீட்டுக்கு rental agreement செய்ய முடிவு செய்தார்.
இந்த நிலையில் ராணுவ அதிகாரி கூறியதாகவும், இந்த வீட்டின் மேனேஜர் என்று ஒருவர் கொல்கத்தாவில் இருக்கும் ஐடி அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வீட்டை உறுதி செய்ய 4000 ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார், இதை அடிப்படையாக வைத்து சுமார் 1.6 லட்சம் ரூபாயை திருடியுள்ளனர். அதை கண்டுப்படித்த சில நொடியில் NoBroker தளத்தில் வீட்டின் விளம்பரம் இல்லை, போன் நம்பர்கள் ஸ்விச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications