பெங்களூர்: இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் வேளையில், ஐடி நகரமான பெங்களூரில் ஒரு அசாதாரண சம்பவம் நடந்துள்ளது. ஒரு நிறுவனர், தனது நிறுவனத்தில் பணிபுரிந்த இன்டர்ன் (Intern), தான் சொந்தமாக உருவாக்கிய AI டெக் நிறுவனத்திற்கு வென்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர் மூலம் முதலீடு பெற்றதால், தன்னுடைய இன்டர்ன்ஷிப்பை உடனடியாக விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது சிஇஓ-வுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
இன்றைய வர்த்தக நெருக்கடியில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெறுவதும் சரி, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஃபண்டிங் வாங்குவதும் சரி ரொம்பவும் கஷ்டம். இப்படியிருக்கும் வேளையில் இன்டர்ன் ஆக பணியாற்றும் ஒரு ஊழியரின் நிறுவனத்திற்கு ஃபண்டிங் கிடைத்துள்ளது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Flexiple என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனர் கார்த்திக் ஸ்ரீதரன், தனது இன்டர்ன் உடன் வாட்ஸ்அப்-இல் நிகழ்ந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்துடன் கார்த்திக் ஸ்ரீதரன் இது போன்ற ஒரு சம்பவம் பெங்களூரில் மட்டுமே நடக்க முடியும் என்று கூறியுள்ளார். Flexiple, நிறுவனங்களையும் சாப்ட்வேர் டெவலப்பர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனம்.
சமூக ஊடகத்தில் இருக்கும் மக்கள் இந்த இன்டர்னின் திறமையை வெகுவாக பாராட்டினாலும், பலர் அவர் தனது மேலாளருக்கு விளக்கும் விதத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
கார்த்திக் ஸ்ரீதரன் பதிவிட்ட டிவிட்டர் பதிவில், ஹேய் வெள்ளிக்கிழமை என்ன ஆச்சு? உன்னையை ஆபீஸ்-ல பார்க்கவேயில்லை..? அதற்கு இன்டர்ன் கொடுத்த பதிலில், ஹேய், சாரி நான் லீவ் எடுத்துக்கொண்டேன், VC உடன் ஒரு மீட்டிங் இருந்தது. என்னுடைய AI ஸ்டார்ட்அப்-க்கு ஃபண்டிங் கிடைத்துவிட்டது, எனவே இனி எனக்கு இன்டர்ன்ஷிப் தேவைப்படாது என தெரிவித்துள்ளார்.
"அந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்! ஆனால், யாராவது அவருக்குத் தகவல் தொடர்புகளை மேம்படுத்த வழிகாட்ட வேண்டும் என்று நம்புகிறேன்!" என்று தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர் அபிமன்யு சக்ஸேனா (@asxna) இந்த டிவீட்டுக்கு பதில் அளித்துள்ளார்.
"அவர் ஃபண்டிங் பெற்றது சிறந்தது!, ஆனால் அவர் அதிக கவனமாகவும், சிறப்பாக உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறேன்! வாழ்க்கை ஒரு பாடம், நாம் அனைவரும் அதை கற்றுக்கொள்கிறோம்! அவருக்கு மிகச் சிறந்தது... எதிர்காலத்திற்காக," என்று கார்த்திக் எம் பட் (@ikarthikmb) கருத்து தெரிவித்தார்.
இந்த இன்டர்ன் சொந்தமாக நிறுவனத்தைத் தொடர இன்டர்ன்ஷிப்பை விட்டுவிட்ட நிலையில், பெங்களூரில் இருந்து ஒரு சாப்ட்வேர் பொறியாளர் வால்மார்ட்டில் ஆறு மாத இன்டர்ன்ஷிப் செய்ய 13 வேலை வாய்ப்புகளைத் தியாகம் செய்தார். ஒரு வருடம் கழித்து, அவர் நிறுவனத்தால் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டார்.


Click it and Unblock the Notifications