இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான அமுல் கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பால் மற்றும் தயிர் பாக்கெட்களை விற்பனை செய்ய நுழைந்த போது பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது கிரீஸ் டப்பாவை எப்படி ஒதைச்ச என்ற கதையாக அமுல் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தில் நந்தினி நுழைய உள்ளது.
கர்நாடக அரசுக்கு சொந்தமான பிரபல பால் பிராண்டான நந்தினி, தற்போது தனது வர்த்தக சந்தையை விரிவுபடுத்தி டெல்லி-க்குள் நுழைய தயாராகி வருகிறது. கர்நாடக பால் கூட்டுறவு கழகம் (KMF), நவம்பர் 21 அன்று தலைநகர் டெல்லியில் தனது பால் பொருட்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் நந்தினி பிராண்ட் வட இந்திய சந்தையில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது.

நந்தினி பிராண்ட் முதலில் டெல்லியில் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் பின்பு பிற பொருட்களை அறிமுகம் செய்யும், சமீபத்தில் திருப்பதி விவகாரத்தில் நந்தினி பிராண்ட் தயாரிப்புகளின் தரம் இந்தியா முழுவதும் அறிந்த நிலையில், இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள டெல்லியில் களமிறங்குகிறது.
இதேவேளையில் நந்தின் நவம்பர் 26 அன்று, பெங்களூரில் இட்லி மற்றும் தோசை மாவு ஆகியவற்றை அறிமுகம் செய்து புதிய வர்த்தக பிரிவில் களமிறங்குகிறது. இதன் மூலம் கர்நாடகாவிலும் நந்தினி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.
KMF அமைப்பின் நந்தினி தற்போது கர்நாடகா-வை தாண்டி மகாராஷ்டிரா (மும்பை, நாக்பூர், புனே மற்றும் சோலாப்பூர்), கோவா, ஹைதராபாத், சென்னை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. டெல்லியில் நுழைவதன் மூலம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த வட இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அமுல், மதர் டெய்ரி, மதுசூதன் மற்றும் நமஸ்தே இந்தியா போன்ற பிராண்டுக்களுடன் நேருக்கு நேர் போட்டியிட உள்ளது.
நந்தினி பிராண்ட் டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளுக்கு சேவை செய்யும் திட்டத்துடன் தினமும் 1 லட்சம் கிலோ லிட்டர் பாலை மண்டியா பால் யூனியினில் இருந்து டெல்லிக்கு அனுப்ப 3 33 கிலோலிட்டர் டாங்கர்களை போக்குவரத்தில் ஈடுப்படுத்த டெண்டர் விட்டுள்ளது. இதன் மூலம் வாரம் 25 டேங்கர்கள் மண்டியாவில் இருந்து டெல்லிக்கு செல்ல உள்ளது, இந்த புதிய வர்த்தகம் மூலம் மண்டியாவில் இருக்கும் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருவாய் கிடைக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications