பெங்களூர் எவ்வளவு பெரிய காஸ்டிலியான சிட்டி என்பது அங்கு இருப்பவர்களுக்கு தெரியும். சாதாரணமாகவே மற்ற இடங்களை ஒப்பிடும்போது பெங்களூரில் வாடகைக்கு ஒரு நல்ல பட்ஜெட் வாடகையில் வீட்டை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.
வீடு வாங்குறது கூட கஷ்டம் இல்லை, ஆனா இந்த வாடகைக்கு வீடு கிடைக்கறதுக்குல்ல, யப்பா தலையே சுற்றிவிடும். அப்படி பிசியான பெங்களூரு சிட்டியில் வீடுதேடும் வாலிபர் ஒருவருக்கு நடந்த சுவரஸ்யமான நிகழ்வைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.
LinkedIn Profile கேட்கும் ஹவுஸ் ஓனர்ஸ்!
அட பெங்களூரில் ஒரு வழியாக கஷ்டப்பட்டு வேலையை வாங்கிய கௌவுதம் எனும் வாலிபர், வீடு தேடும் படலத்தை தொடங்கியுள்ளார். அப்பொழுது அவர் இணையத்தில் தேடி ஒரு வீட்டையும் தேர்வு செய்து, அதற்கான விவரங்களை அதன் வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் கௌதமிடம் அவரின் லின்கிடுஇன் லிங்கை பகிருமாறு கேட்டுள்ளார்.
பெங்களூர் டெக் நகரம் என அனைவருக்கும் தெரியும், ஆனால் இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது வியப்பு அளிக்கிறது.
வீடு தேடும் வேட்டை!
அதனைத் தொடர்ந்து கௌதம் அந்த வாட்ஸ்-அப் சேட்டை ஸ்கீரீன் ஷாட் எடுத்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அதில் 11 ஆவது நாள் வீடு தேடும் வேட்டை என்ற தலைப்புடன் அந்த வாட்ஸ்-அப் உரையாடலை பகிர்ந்துள்ளார்.
ஹவுஸ் ஓனர் கண்டிஷன்!
அதில் கௌதம், தேர்ந்தெடுத்த வீட்டைப் பார்க்க வரலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வீட்டு உரிமையாளர் உங்கள் profile ஐ மட்டும் அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். குழப்பமடைந்த கௌதம் profile எதற்கு என்று கேள்வி கேட்டதற்கு, ஹவுஸ் ஓனர் கேட்டதாக கூறியுள்ளார். அதனையடுத்து கௌதமும் அவருடைய லின்கிடுஇன் profile ஐ அனுப்பியுள்ளார்.
பெங்களூர் ஹவுஸ் ஓனர்ஸ் அலப்பறைகள்!
கௌதம் அந்த ஸ்கீரீன் ஷாட்டை ட்விட்டரில் பதிவிட்டவுடன் அதற்கு பலரும் அவர்களின் பெங்களூரில் வீடு தேடியபொழுது அவர்களிடம் கேட்கப்பட்ட விவரங்கள் மற்றும் கேள்விகளை குறித்து பல கதைகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஹவுஸ் ஓனர்கள் கேட்கும் கேள்விகளால் திக்குமுக்காடி போன இளைஞர்கள் பலரின் உரையாடல்களும் உண்டு.
அதில் கமெண்ட் செக்சனில் ட்விட்டர் பயனாளர் ஒருவர், வீட்டு உரிமையாளர் லின்கிடுஇன் profile உடன் சேர்த்து அவரைப் பற்றிய ஒரு சிறு விளக்கமும் கேட்டுள்ளார்.
லிஸ்ட் போயிகிட்டே இருக்கு!
கௌதம் பகிர்ந்த ட்வீட்டை அடுத்து, பெங்களூரில் வீடு தேடியதில் பலருக்கும் நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அதில் ஒரு ட்விட்டர் பயனரின் நண்பர்கள் வாடகை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருந்துள்ளதாகவும், அதனை அறிந்த ஹவுஸ் ஓனர் பல கண்டிசன்களை போட்டு வாடகையை கூட்டிக் கொண்டே போனதாகவும் கூறியுள்ளார்.
வேலை இல்லன்னா வீடு இல்லை!
பெங்களூரில் வாடகை வீட்டில் இருக்க வேண்டுமானால் கண்டிப்பாக நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருக்க வேண்டும். தொழில்முனைவோர், புதிதாக அங்கு பிசினஸ் ஸ்டார்ட் செய்பவர்களுக்கு கண்டிப்பாக வீடு கிடைப்பது அசாத்தியமான ஒன்று என மற்றொரு நபர் ட்வீட் செய்துள்ளார்.
எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லப்பா!
இப்படி ஹவுஸ் ஓனர்ஸ் போடும் கண்டிசன் லிஸ்ட் பற்றி அனைவரும் பேசுகையில், ஒருவர் மட்டும் தனக்கு இம்மாதிரியான எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை என ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்திலிருந்து, பணிக்காக பெங்களூரு வந்ததாகவும், இதுவரை அவர் பல இடங்களில் தங்கியதாகவும், ஆனால் அவருக்கு இம்மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் , இப்பொழுது ஒரு நல்ல சொகுசான வீட்டில், நியாயமான வாடகை கொடுத்து இருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
1 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த ட்வீட்!
இப்படியாக பல ட்வீட்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்ற கௌதமின் ட்வீட் போட்ட ஒரு மணிநேரத்தில் 1 லட்சம் லைக்குகளைப் பெற்று அவரின் ட்விட்டர் பதிவு நெட்டிசன்கள் கையில் சென்று வைரலாகி வருகிறது.
இது ஒரு ஜாலியான விஷயமாக பலரும் பகிர்ந்தாலும், மெட்ரோ சிட்டியில் வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்டமோ, அதுபோல அங்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் கஷ்டம்தான்.


Click it and Unblock the Notifications