இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூர் நகரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புக்காகவும் கல்விக்காகவும் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
பெங்களூரு ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வாடகை சந்தை என்பது மிகவும் பிசியாக இருக்கக்கூடிய ஒரு துறையாக செயல்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப ஏற்ப பெங்களூருவில் வாடகை வீடுகளுக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது. வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரிப்பதால் பெங்களூருவின் பிரதான பகுதிகளில் வீடு வாடகைகள் மிக அதிக அளவில் வசூல் செய்யப்படுகின்றன.

குறைந்தபட்சம் ஒரு படுக்கை அறை கொண்ட வீடு வேண்டுமென்றால் கூட சராசரியாக முப்பதாயிரம் ரூபாய் முதல் வாடகை வசூல் செய்யப்படுகிறது. நகரின் பிரதான பகுதியில் வீடு தேவைப்படுகிறது என்றால் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகையாகவும் 10 மாத வாடகையை செக்யூரிட்டி டெபாசிட் தொகையாகவும் வீட்டு உரிமையாளர்கள் கேட்கின்றனர் .
பொதுவாக வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வருபவர்களிடம் செக்யூரிட்டி டெபாசிட் தொகையை வாங்குவது என்பது அவர்களுக்கான ஒரு பாதுகாப்பை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. வீடு காலி செய்யும்போது நாம் கொடுத்த டெபாசிட் தொகையில் முழுமையான தொகையை வழங்க மாட்டார்கள். சில சமயங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்கள் சொல்லாமல் திடீரென வீட்டை காலி செய்து விட்டாலும் தங்களுக்கு நிதி பாதுகாப்பு செக்யூரிட்டி டெபாசிட் மூலம் கிடைக்கிறது.
இத்தகைய சூழலில் பெங்களூருவை சேர்ந்த ஒரு வீட்டு உரிமையாளர் செக்யூரிட்டி டெபாசிட் தொகையை வழங்காமல் திடீரென மாயமாக இருப்பதாக ஒரு நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய ரெடிட் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது . பெங்களூருவில் வாடகைக்கு குடியிருக்க கூடிய நபர்கள் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக தொடர்ந்து ரெடிட் தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
திடீரென வாடகையை உயர்த்துவது அதிகபட்ச தொகையை செக்யூரிட்டி டெபாசிட்டாக கேட்பது என அட்டூழியம் செய்கின்றனர் என தொடர்ச்சியாக சாடி வருகின்றனர். இந்த சூழலில் பெங்களூருவில் வேலை செய்யக்கூடிய ஒரு நபர் பிடிஎம் லேஅவுட் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தேன் அந்த வீட்டிலிருந்து நான் தற்போது வேறு இடத்திற்கு மாறிவிட்டேன். அந்த வீட்டை காலி செய்து வாடகை ஒப்பந்தத்தின் படி முறையாக சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டேன் என கூறியுள்ளார்.
ஆனால் என்னுடைய உரிமையாளர் நான் அந்த இடத்தை காலி செய்ததிலிருந்து என்னுடைய போன் கால்களையோ என்னுடைய மெசேஜ்களையோ ஏற்காமல் பதில் அளிக்காமல் இருக்கிறார் , என்னுடைய செக்யூரிட்டி டெபாசிட் தொகையை அவர் இதுவரை வழங்கவில்லை எனக் கூறியிருக்கிறார். அவரை தற்போது தொடர்பு கொள்ளவே முடியவில்லை அவர் மாயமாகிவிட்டார் என பதிவு செய்திருக்கிறார் . பெங்களூரில் தற்போது இது போன்ற மோசடிகள் தான் அதிகமாக நடைபெறுகிறது எனக் கூறியிருக்கும் அவர் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வீட்டை காலி செய்து விட்டாலும் நாம் வழங்கிய செக்யூரிட்டி டெபாசிட் தொகையை திரும்ப வழங்காமல் ஏமாற்றுகின்றனர் என கூறியிருக்கிறார் .
இது மிக மோசமான ஒரு செயல் என்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகமும் கர்நாடக மாநில காவல்துறையும் தனக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதற்காக தன்னுடைய வாடகை ஒப்பந்தம் ,அந்த வீட்டு உரிமையாளர் உடனான தன்னுடைய போன் கால் பதிவுகள் உள்ளிட்டவற்றையும் வழங்க தயாராக இருக்கிறேன என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவின் கீழ் பதிவு செய்திருக்கும் பலரும் பெங்களூருவில் தற்போது இதுபோலதான் பலரும் நடந்து கொள்கின்றனர் எனக்கும் இதே போல தான் நடந்தது என்னுடைய டெபாசிட் தொகையை நான் இதற்கு முன்பு குடியிருந்த வீட்டில் உரிமையாளர் திரும்ப வழங்கவே இல்லை என ஒரு நபர் கூறியுள்ளார்.பலரும் உங்களுடைய டெபாசிட் தொகையை திரும்ப பெறாமல் ஒருபோதும் வீட்டை காலி செய்து சாவியை உரிமையாளரும் ஒப்படைக்காதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications