சமீபகாலமாக பெருநகரங்களில் வாடகை செலவுகள் அதிகரித்து வருகின்றன. கிராமப்புறங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களும் குடும்பத்தோடு தங்கள் தொழிலுக்காக பிற நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதுவும் வாடகை செலவுகள் அதிகரிக்க ஒரு காரணமாக அமைகிறது. இதனால் பெங்களூரு போன்ற நகரங்களில் வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அப்படி பெங்களூரைச் சேர்ந்த ஒரு வீட்டு உரிமையாளர், அவருடைய அப்பார்ட்மெண்டுக்கு குடியேற வந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட்டாக கேட்ட சம்பவம் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஹர்னித் கவுர் என்ற பெண் மாதம் 40,000 ரூபாய் வாடகை செலுத்தும் அப்பார்ட்மெண்டுக்கு குடியேற முடிவு செய்துள்ளார்.

அப்போது அந்த அப்பார்ட்மெண்டின் உரிமையாளர் அவரிடம் 5 லட்சம் ரூபாயை செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்தும்படி கூறியுள்ளார். இதை கேட்ட அந்தப் பெண் ஷாக் ஆகியுள்ளார். உடனே அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவருடைய விரக்தியை தெரிவித்திருந்தார்.
டெல்லி போன்ற பல நகரங்களில் செக்யூரிட்டி டெபாசிட் தொகை பொதுவாக இரண்டு முதல் மூன்று மாத வாடகை தொகையாக இருக்கும். இருப்பினும் இவ்வளவு அதிக அளவிலான செக்யூரிட்டி டெபாசிட்டை கேட்டது அந்தப் பெண்ணுக்கு மட்டும் இன்றி நெட்டிசன்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் விலைகளுக்கு பெயர் பெற்ற பெங்களூரில் 5 அல்லது 10 மாத வாடகையை டெபாசிட் தொகையாக கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்னித் கவுர்-இன் போஸ்ட்க்கு ரூ.5 லட்சம் டெபாசிட் சரியானது அல்ல என்று பலரும் தங்கள் கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு வருட வாடகையை விட அதிகம் என்று சிலர் கமெண்ட் செய்திருந்தனர்.

அந்தப் பெண்ணின் போஸ்ட் பலராலும் பகிரப்பட்டது. நியாயமற்ற டெபாசிட் தொகையின் காரணமாக அந்த அப்பார்ட்மெண்டிற்கு வாடகைக்கு போகாமல் கவுர் வேறு இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார். பெங்களூரில் அதிகரித்து வரும் வாடகை செலவு மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் பற்றிய பெரிய விவாதத்தை இவருடைய பதிவு தூண்டியிருக்கிறது.
ஒரு பயனர் ஒரு வருட டெபாசிட்டா? இது எப்போதிலிருந்து வழக்கமானதாக மாற்றப்பட்டது? என்று தனது விரக்தியை கமெண்டாக தெரிவித்திருந்தார். மற்றொரு பயனர் பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் திருடர்கள்.. உங்கள் வாழ்க்கையை அவர்கள் மோசமாக்கி விடுவார்கள் என்று தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இவர்களுடைய கமெண்ட் பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டியுள்ளது. வாடகை மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் என இரண்டும் கட்டுப்பாட்டை மீறி செல்வதாக பலரும் கூறியுள்ளனர்


Click it and Unblock the Notifications