பெங்களூரின் இரு துருவத்தை இணைக்கும் சுங்க கட்டணம் இல்லாத மேஜர் ஆர்டிரியல் சாலை (Major Arterial Road) இரண்டு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் செல்லகட்டா பகுதியில் இருந்து மஹாடி சாலை வரையிலான 10.8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை 585 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஆறு வழி சாலையாகவும் இரண்டு சர்வீஸ் சாலைகளையும் கொண்டதாக இது கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தெற்கு மற்றும் மேற்கு பெங்களூரு பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து எளிதாக்கப்படும். குறிப்பாக சுங்க கட்டணம் இல்லாத போக்குவரத்து வசதியை அளிக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த சாலை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு பெங்களூரில் இருந்து மேற்கு பெங்களூருக்கு செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகக்கூடிய நிலையில் இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் இந்த பயண நேரம் வெறும் 10 நிமிடங்களாக குறைந்து விடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதலில் 465 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தான் இந்த சாலை பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இது 585 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். முதல் கட்டமாக இந்த சாலை கட்டுமான பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தான் அரசுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. பல்வேறு கிராமங்கள் வழியே செல்வதாலும் வனப்பகுதி வழியே செல்வதாலும் கிராம மக்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவது மற்றும் வனத்துறையினரின் அனுமதியை பெறுவது என பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த சாலை கட்டுமான பணிகள் முழுமை அடைந்து மேஜர் ஆர்டிரியல் சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கட்டுமான பணியை கண்காணித்து வரக்கூடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2011ஆம் ஆண்டு முதலே இந்த திட்டத்திற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டிலேயே இந்த சாலை திட்ட பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்டதே 2018 ஆம் ஆண்டில் தான்.
கர்நாடக மாநில அரசு பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை துமக்குரு அல்லது கனகபுரா சாலையில் அமைக்க திட்டமிட்டு இருப்பதால் இந்த மேஜர் ஆர்டிரியல் சாலை இரண்டாவது விமான நிலையத்திற்கான போக்குவரத்தை இன்னும் எளிதாக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications