ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட தனது ஷவர்மாவில் மெட்டல் துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெங்களூரு நபர் ஒருவர், தான் ஆர்டர் செய்த ஸ்விக்கி தளத்தில் முறையிட்டால் அவருக்கு வெறும் 50 ரூபாய் பணத்தைத் திரும்பக் கொடுத்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இந்தியாவில் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி சேவைகள் பலருக்கும் அவர்களுடைய வாழ்க்கை மிகவும் எளிதாகியுள்ளது, பலருக்கு வேலைவாய்ப்பு கூடக் கிடைத்துள்ளது. ஆனால் இதேவேளையில் சில பல பிரச்சனைகளும் வருகிறது, குறிப்பாக உணவு மற்றும் உணவு தரம் சார்ந்த பிரச்சனைகள் அதிகளவில் எழுந்து வருகிறது.

பெங்களூரை தேர்ந்த ஒரு Swiggy வாடிக்கையாளர், ஸ்விக்கி தளத்தில் தான் எதிர்கொண்ட மோசமான அனுபவத்தை Reddit தளத்தில் பதிவாக எழுதியுள்ளார். இவருடைய பதிவில் ஸ்விக்கியின் வாடிக்கையாளர் சேவை துறை எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து விளக்கியது தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்டெர்லிங் க்ரைசஸ் என்ற பெயருடன் ரெடிட் தளத்தில் செய்யப்பட்ட பதிவில், பெங்களூரில் உள்ள நாகவாராவில் உள்ள அப்சல்யூட் ஷவர்மா உணவகத்தில் சிக்கன் ஷவர்மாவை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்த உடன் சாப்பிட தொடங்கியபோது, கடினமான ஒன்றைக் கடித்தார், எடுத்துப்பார்த்தால் ஷாக்.
ஷவர்மா-விற்குள் இருந்தது ஷவர்மாவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஃபிளேம் கிரில்லில் இருந்து ஒரு உலோகத் துண்டு. கடுப்பான இந்தப் பெங்களூர் ஸ்டெர்லிங் க்ரைசஸ் என்ற பெயர் கொண்ட நபர் ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள முடிவு செய்தார்.
ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு, முழுப் பணத்தையும் திரும்பக் கோரினார், இதோடு ஸ்விக்கி மூலம் தான் மீண்டும் ஆர்டர் செய்யாமல் எனது வீட்டு வாசலில் ஒரு புதிய ஷவர்மா டெலிவரி செய்யப்பட வேண்டும் எனவும் கோரினார். கடைசியாக அப்சல்யூட் ஷவர்மா உணவகம் மீது ஸ்விக்கி எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.
இவருடைய கோரிக்கைகளுக்கு ஏற்காத, உணவு சுகாதார மீறலுக்கு மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, Swiggy வாடிக்கையாளர் சேவை நபர் அவர் ஆர்டர் செய்த ரூ.160க்கும் கட்டணத்தில் ரூ.50-ஐத் ரீபண்ட் அனுப்புவதாகக் கூறியுள்ளார்.
இதில் கடுப்பான இந்த நபர் இந்த ஷவர்மா-வை சாப்பிட்டு இருந்தால் இது தொண்டையில் சிக்கி இறந்திருப்பேன், நீங்க இப்படித் தான் உங்க வாடிக்கையாளர்களை நடத்தூவீர்களா என வெளுத்துள்ளார். இதன் பின்னர் எவ்விதமான நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை, தொடர்ந்து அந்த ரெஸ்டாரென்ட் இயங்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications