இன்று ஆன்லைன் வர்த்தகம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அப்பா, அம்மாவை தவிர்த்து எல்லாவற்றையும் வாங்கவும், விற்கவும் செய்யலாம் என்ற அளவுக்கு ஆன்லைன் சந்தை பெரிய அளவில் விரிந்துள்ளது.
சமூக ஊடகங்களையும் சிலர் விற்பனை தளமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். உதாரணமாக வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வாடகைக்கு விடும் வீடுகளின் போட்டாக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வாடகை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்கின்றனர். சிலர் தங்கள் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்ற விளம்பரங்களை செய்கின்றனர்.

இருப்பினும் ஆன்லைன் சந்தையில் இதுவரை கேள்விப்படாத வகையில் ஒரு பொருளை ஒருவர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். வீட்டு உரிமையாளர்கள் மரச்சாமான்கள் அல்லது உபகரணஙகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்க நினைப்பது பொதுவான ஒன்று.
ஆனால் ஒருவர் தான் பயன்படுத்திய தண்ணீர் கேன்கள் மற்றும் டிஸ்பென்சரை (பாட்டம் கேன்) விற்பனை செய்ய உள்ளதாக போஸ்ட் செய்தார். மேலும் அதன் விலையை 500 டாலர் அதாவது நம்முமூர் மதிப்புக்கு சுமார் ரூ.41,000 என்று குறிப்பிட்டு இருந்தது பலரையும் வியப்பதில் ஆழ்த்தியுள்ளது.
பேஸ்புக்கில் பிளாட் அண்ட் பிளாட்மேட்ஸ் பெங்களூரு குழு, பெங்களூருவிலிருந்து வெளியேறுவதால் விற்கப்படுகிறது என்ற தலைப்பிட்டு, தண்ணீர் கேன் மற்றும் டிஸ்பென்ஸரின் போட்டாவை பதிவேற்றம் செய்து, அதன் விலையை 500 டாலர் என்று குறிப்பிட்டு இருந்தது. இதனை பார்த்த ஒருவர் அதனை ஸ்கிரீன் ஸ்டாட் எடுத்து தனது எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்தார். இதனையடுத்து, தற்போது இந்த பதிவு இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த பதிவுக்கு பலரும் பலவிதமாக கருத்தை பதிவு செய்துள்ளனர். ஒருவர் எனது பணத்தை மாத தவணையில் வாங்கி கொள்வீர்களா என்று கிண்டலாக தெரிவித்து இருந்தார். மற்றொருவர் போக்குவரத்து மற்றும் நிறுவுதல் செலவு சேர்க்கப்பட்டுள்ளதா என்று நகைச்சுவையாக பதிவு செய்து இருந்தார்.
இருப்பினும் விற்பனையாளர் ரூ.500 என்பதை தவறுதலாக 500 டாலர் என்று போட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. ஆன்லைனில் எதையும் விற்று விடலாம் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுவதை இது வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications