பெங்களூருவில் 30 வயது இளைஞர் ஒருவர், சினிமா தியேட்டரில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் அதிக விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதால் தனது நேரம் வீணடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி PVR சினிமாஸ், INOX மற்றும் BookMyShow போன்ற நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அபிஷேக் எம். ஆர் என்ற நபர் 2023-ஆம் ஆண்டில் சாம் பகதூர் என்ற திரைப்படத்திற்காக மூன்று டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்தார். இந்த படம் மாலை 4.05-க்கு ஒளிபரப்பாக இருந்தது. திரைப்படம் மாலை 4.05-க்கு தொடங்கினால் 6:30 மணிக்கு முடிவடைந்துவிடும். அதன் பிறகு தான் வேலைக்கு செல்லலாம் என்று அபிஷேக் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பல்வேறு திரைப்படங்களின் விளம்பரங்கள் மற்றும் ட்ரெய்லர்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட பிறகு படம் மாலை 4:30 மணிக்கு தொடங்கியதாகவும், இது கிட்டத்தட்ட 30 நிமிடங்களை வீணடித்ததாகவும் அபிஷேக் குற்றம் சாட்டினார்.

எனவே அபிஷேக் நடந்த விஷயம் குறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அபிஷேக் தனது புகாரில் அன்றைய தினம் திட்டமிடப்பட்ட பிற வேலைகள் மற்றும் சந்திப்புகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், இதனால் நிதி அடிப்படையில் சில இழப்புகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டினார். விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக திரைப்படத்தின் நேரத்தை தவறாக தெரிவிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும் குறிப்பிட்டார். அபிஷேக்கின் மனுவை ஏற்ற நுகர்வோர் நீதிமன்றம் நேரம் என்பது பணமாக கருதப்படும் ஒன்று என்று தீர்ப்பளித்தது.
தியேட்டரில் சும்மா உட்கார்ந்து கொண்டு ஒளிபரப்பாகும் அனைத்தையும் பார்ப்பதற்கு 25 முதல் 30 நிமிடங்கள் அதிகம் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது. ஸ்கெடியூல் டைட்டாக இருப்பவர்கள் தேவையற்ற விளம்பரங்களை பார்ப்பது நியாயமற்றது என்றும் கூறப்பட்டது. PVR மற்றும் INOX நிறுவனங்கள், சட்டப்படி பொது சேவை அறிவிப்புகளை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தன.
படம் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பும், இரண்டாம் பாதிக்கு முந்தைய இடைவேளையிலும் பொது சேவை அறிவிப்புக்கள் திரையிடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், BookMyShow இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
அபிஷேக்கின் புகாரை ஏற்றுக்கொண்ட நுகர்வோர் நீதிமன்றம் அவரின் நேரத்தை வீணடித்ததற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காகவும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு 5000 ரூபாயும் புகார் மற்றும் நிவாரணங்களுக்காக 10,000 ரூபாயையும் சேர்த்து வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த அபராதத்தை PVR மற்றும் INOX நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அதோடு PVR மற்றும் INOX நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது, அதை நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications