கர்நாடகாவின் பொருளாதாரத்தில் பெங்களூர் பெரும் பங்கு வகிக்கிறது, அதேபோல் சேவைத் துறை கர்நாடக ஜடிபி-யில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் கர்நாடகா - பெங்களூரு ஐடி துறையைத் தாண்டி மற்ற துறையில் வளர்ச்சி குறைவாகவும், அனைவருக்குமான சந்தையாகவும் இல்லை என்ற வாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இதேவேளையில் தமிழ்நாடும், தலைநகரான சென்னையைப் பார்த்தால் ஐடி துறையைத் தாண்டி உற்பத்தித் துறையிலும் பெரும் வர்த்தகத்தையும், வேலைவாய்ப்பு சந்தையைக் கொண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு - சென்னை அனைத்து தரப்பினருக்குமான சந்தையாக உள்ளது.

தமிழ்நாட்டை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு கர்நாடக அரசு சமீபத்தில் உற்பத்தித் துறையில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்து, தொழிற்சாலையை அமைத்து வருகிறது. ஆனால் தற்போது கர்நாடகா மாநிலத்தின் உற்பத்தித் - ஏற்றுமதி துறையில் வளர்ச்சி பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
கர்நாடகாவின் உற்பத்தித் - ஏற்றுமதி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் பெங்களூரு நகரம், போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும், டிராபிக் பிரச்சனை காரணமாகப் போக்குவரத்தில் இருக்கும் தாமதங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வீழ்ச்சி வெறும் 1 சதவீதம் என்றாலும், விஸ்வேஸ்வரயா வர்த்தக ஊக்குவிப்பு மையத்தின் (விடிபிசி) சமீபத்திய அறிக்கையில் ஷாக் கொடுக்கும் பல விஷயங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரை உற்பத்தி களமாக மாற்றியிருக்கும் வேளையில் இந்நகரில் இருக்கும் தொழிற்சாலைகளுக்குத் துறைமுக இணைப்பு இல்லாதது, கோல்டு ஸ்டோரேஜ் இல்லாதது, சோதனை ஆய்வகங்கள் இல்லாதது மற்றும் தாமதமான சரக்கு போக்குவரத்து போன்றவை பெரும் பின்னடைவாகவும், உற்பத்தித் துறையைச் சிதைத்து வருவதாக எச்சரிக்கின்றன.
கர்நாடகாவின் உற்பத்தி அடிப்படையிலான ஏற்றுமதியில் சுமார் பெங்களூரு அர்பன் 38 சதவீதமும், பெங்களூரு ரூரல் 12 சதவீதமும் உற்பத்தி துறைகளில் பங்களிக்கிறது. தற்போது இரு பகுதிகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது முக்கியமான விஷயமாக டைம்ஸ் ரிப்போர்ட் கூறுகிறது.

பெங்களூரு அர்பன்
பெங்களூரு நகரத்தில் இயந்திரங்கள் ஏற்றுமதி வருடாந்திர அடிப்படையில் 1 சதவீதம் குறைந்துள்ளது, அதேநேரம் மின்சார இயந்திரங்கள் அவுட்புட் 5 சதவீதம் சரிந்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் 3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன, மருத்துவ உபகரணங்கள் போன்ற துணைப்பிரிவுகளும் பலவீனமடைந்துள்ளன.
இந்த வீழ்ச்சிக்கு டிராபிக், அதிகப்படியான லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் மற்றும் துறைமுக வசதிகள் இல்லாதது தான் காரணம் என்று VTPC அறிக்கைகள் கூறுகின்றன.

பெங்களூரு கிராமப்புறம்
பெங்களூரு நகரத்தைப் போலவே கர்நாடகாவின் ஏற்றுமதியில் 12 சதவீதம் பங்களிக்கும் பெங்களூரு கிராமப்புறம், போதிய கோல்டு ஸ்டோரேஜ் வசதிகள், கண்டெய்னர் டெப்போக்கள் இல்லாதது, பிளக்-அண்ட்-ப்ளே தொழில்துறை வசதிகள் இல்லாததால் கடுமையான கட்டமைப்பு பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.
பெங்களூரு கிராமப்புறம் சந்தையில் இருந்து கெமிக்கல் ஏற்றுமதி 3 சதவீதம் குறைந்துள்ளது, பல தொழில்துறை பகுதிகள் குறைந்த அளவு பயன்பாட்டில் இருக்கிறது அல்லது மோசமான சேவைகளுடன் இருப்பதாக VTPC அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
இந்த பிரச்சினைகள், கர்நாடக மாநில உற்பத்தியாளர்களைத் தடுமாறச் செய்து, அவர்களின் வளர்ச்சி வாய்ப்புகளைக் குறைத்துள்ளது. மேலும் இது புதிய முதலீடுகள் வருவதையும் தடுக்கிறது.
ஐபோன் உற்பத்தி ஆலை
பெங்களூர் உள்கட்டமைப்பு வசதிகளை விரைவில் மேம்படுத்தவில்லை எனில் தமிழ்நாட்டுடன் போட்டி போட்டு கர்நாடக அரசு பெங்களூர் ஏர்போர்ட் அருகில் தேவனஹள்ளியில் வரவிருக்கும் ஃபாக்ஸ்கான் ஐபோன் ஆலை மற்றும் டெக்ஸ்டைல் பூங்காக்கள் போன்றவை மோசமாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications