இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியும், மணிப்பால் குளோபல் எஜுகேஷன் குழுமத்தின் தலைவருமான டிவி மோகன்தாஸ் பாய் புதன்கிழமை, “இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம்” என்ற பெயரை பெங்களூரிடம் இருந்து ஹைதராபாத் கைப்பற்றக்கூடும் என்றும் கூறி கர்நாடகா அரசை எச்சரித்தார்.
மோகன்தாஸ் பாய் இந்த மோசமான நிலைக்கு முக்கியமாக காரணம் அடுத்தடுத்து வந்த கர்நாடக அரசாங்கங்கள் ஐடி துறை வளர்ச்சியில் கவனம் செலுத்தாததும், புறக்கணித்ததும் தான் என்று குற்றம் சாட்டினார். மேலும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் பெங்களூரை மேம்படுத்துவதில் அதிகப்படியான முயற்சிகளை எடுப்பார் என்று தான் நம்புவதாக டிவிட்டரில் பதிவிட்டார்.

இந்த நிலையில் மோகன்தாஸ் பாய் டிவீட்டுக்கு பதில் அளித்த பலர் ஹைதராபாத் ஐடி துறையில் வேகமாக வளர்ச்சி அடைய தெலுங்கானா ஐடி அமைச்சர் கேடி ராமராவ் அவர்களின் பங்களிப்பு முக்கியம் என பாராட்டி வருகின்றனர்.
தெலுங்கானா ஐடி அமைச்சர் கேடி ராமராவ் தலைமையில் பல பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அலுவலகத்தை திறந்துள்ளது மட்டும் அல்லாமல், அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து ஐடி துறையை மேம்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டு ஸ்டார்ட்அப் முதல் பெரு நகரங்கள் வளர்ச்சி அடைய பல முயற்சிகளை மேற்கொண்டார். இதில் முக்கியமான ஒன்று T-HUB.
தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில் மோகன்தாஸ் பாய் டிவீட்டுக்கு பதில் கொடுக்கையில்.. இந்த தேர்தலில் BRS வெற்றிப்பெற்றால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம்" என்ற பெயரை கட்டாயம் ஹைதராபாத் பெறும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் ரியல் எஸ்டேட் முதலைகளிடம் செல்லும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications