சென்னை: இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு, போக்குவரத்து நெரிசல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளால் போராடி வருகிறது. பெங்களூர் தண்ணீர் பிரச்சனை தற்போது இந்தியாவே பேசும் வகையில் மாறியுள்ளது.
பெங்களூரில் இருக்கும் மக்களுக்கு கடந்த சில வாரங்களாகத் தண்ணீர் பிரச்சனை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ஆர்ஆர் நகர், பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, தாசரஹள்ளி, எலஹங்கா பகுதிகளில் இருக்கும் 35 வார்டுகளில் அதிகப்படியான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் ஹைதராபாத், புனே போன்ற முன்னணி தொழில்நுட்ப நகரங்களை விட பெங்களூருவின் போட்டித்திறனை பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், பெங்களூருவின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தையையும், தொழில்நுட்ப சார்ந்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
பெங்களூருவில் குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் குழாய் மூலம் வரும் குடிநீர் விநியோகம் குறைந்து, தண்ணீர் டேங்கர்கள் வாயிலாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதேவேளையில் தண்ணீர் டேங்கர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இது தகவல் தொழில்நுட்ப துறை உட்பட அனைத்து தொழில்களை, வர்த்தகத்தை பாதிக்கிறது.
பெங்களூர் நகரம் ஏற்கனவே மோசமான டிராபிக் பிரச்சனைக்குப் பெயர் பெற்றது. தற்போது தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையும் சேர்ந்து, பெங்களூரின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.
போதிய கட்டமைப்புகள் இல்லாததும், மக்கள் தொகை அதிகரிப்பும் பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசலை உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக, உற்பத்தித்திறன் இழப்பு, அதிக காற்று மாசுபாடு அளவுகள் மற்றும் ஊழியர்களின் நலன் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பெங்களூரில் இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைவாக உள்ளது. மேலும், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கையாள்வதற்குப் பெங்களூருவின் கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக, மக்கள் மற்றும் நிறுவனங்கள் ஹைதராபாத் மற்றும் புனே போன்ற சிறந்த கட்டமைப்புகளை கொண்ட பிற நகரங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர் என்று ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஸ்கைடீல்ஸின் நிர்வாக இயக்குனர் சதீஷ் பி.என் கருத்து தெரிவித்தார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான அடுக்குமாடி கட்டிடத்தின் தலைவருமாவார்.
பெங்களூருவின் தண்ணீர் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளின் விளைவுகள் வெறும் சிரமத்தைத் தாண்டி, உலகளாவிய தொழில்நுட்ப மையமாகவும், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் காந்தமாகவும் இருக்கும் பெங்களூருவின் ஆதிக்க நிலையை கடுமையாகப் பாதிக்கிறது.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஹைதராபாத், புனே ஆகிய நகரங்கள் பெங்களூர் ஐடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதனால் பெங்களூர், இந்தியாவின் சிலிக்கான் வேலி பட்டத்தை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
ஏற்கனவே வர்த்தகம், மென்பொருள் ஏற்றுமதியில் பெங்களூர்-க்கு இணையாக ஹைதராபாத் உயர்ந்து வரும் வேளையில் இந்த தண்ணீர் பிரச்சனை பெங்களூர் வளர்ச்சிக்கும் பெரும் முட்டுக்கட்டையாக வந்துள்ளது. கர்நாடக அரசு இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது தான் அடுத்த முக்கியமான விஷயமாக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications