கர்நாடக ராஜ்யோத்சவத்தை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ (Namma Metro) மஞ்சள் வழித்தடத்தில் (Yellow Line) 5-வது மெட்ரோ ரயில் சேவை நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் தொடங்குவதாக, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மஞ்சள் வழித்தடம் என்பது பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ ரயில் அமைப்பின் முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாகும். இது பெங்களூருவின் தெற்குப் பகுதியை, முக்கிய ஐ.டி. மற்றும் தொழில் மையங்களுடன் இணைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 5-வது ரயில் இணைக்கப்படுவதால், இந்த பரபரப்பான மஞ்சள் வழித்தடத்தில் பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் அதிகபட்சப் பயணிகள் நேரத்தின்போது, ரயில் சேவைகளுக்கு இடையிலான கால இடைவெளி கணிசமாக குறையும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது 19 நிமிடங்களாக இருக்கும் சேவை இடைவெளி, இனி அனைத்து நாட்களிலும் பீக் ஹவர்ஸ் நேரத்தில் 15 நிமிடங்களாக மேம்படுத்தப்படும் என்று BMRCL அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம், குறைந்த காத்திருப்பு நேரத்துடன் பயணிகளுக்கு சீரான மற்றும் நம்பகமான சேவையை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆர்.வி. சாலை (R V Road) மற்றும் பொம்மசந்திரா (Bommasandra) ஆகிய இரு டெர்மினல்களில் இருந்து புறப்படும் முதல் மற்றும் கடைசி ரயில்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் மெட்ரோ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரயில்களை உருவாக்கியது யார்..?: மஞ்சள் வழித்தடத்திற்கான இந்த புதிய மெட்ரோ பெட்டிகள், சீனாவின் அரசுக்கு சொந்தமான சி.ஆர்.ஆர்.சி நாஞ்சிங் புசென் கோ லிமிடெட் (CRRC Nanjing Puzhen Co Ltd) நிறுவனத்துடன் போடப்பட்ட துணை ஒப்பந்தத்தின் கீழ், டைட்டகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TRSL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
BMRCL, 2019 டிசம்பரில், TRSL நிறுவனத்திற்கு ரூ.1,578 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மஞ்சள் வழித்தடத்திற்கு 15 ரயில்களும், ஊதா மற்றும் பச்சை வழித்தடங்களுக்கு 21 ரயில்களும் என மொத்தம் 36 ரயில் பெட்டிகளை 173 வாரங்களுக்குள் வழங்க வேண்டியிருந்தது. ஆனால், இந்தியப் பங்குதாரரைக் கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பொறியாளர்களுக்கு விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த ஆர்டர் தாமதமானது.
மஞ்சள் வழித்தடத்தின் மாதிரி ரயில் CRRC ஆல் கடந்த 2024 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து TRSL மேலும் இரண்டு ரயில்களை இந்த ஆண்டு வழங்கியது. கடந்த செப்டம்பர் மாதம்தான் 4-வது ரயில் இந்த வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மொத்தம் 5 ரயில்கள், 19.15 கி.மீ நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications