பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவை போக்குவரத்து நெரிசலின் தலைநகரம் என கூறலாம், அந்த அளவுக்கு அங்கே டிராபிக் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த சூழலில் பெங்களூரில் அனைத்து பகுதிகளையும் இணைக்கக்கூடிய வகையில் மெட்ரோ சேவைகளை கொண்டு வர வேண்டும் என மாநில அரசு திட்டமிட்டு இருக்கிறது.
மெட்ரோ சேவை: இதன் ஒரு பகுதியாக தான் பெங்களூரு மக்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் சிட்டி பகுதி வரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதி வரையிலான மெட்ரோ ரயில்கள் எப்போது முதல் இயக்கப்படும் என்ற முக்கியமான அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. பெங்களூருவின் பிரதான பகுதிகளையும் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்படக் கூடிய எலக்ட்ரானிக் சிட்டியையும் இணைக்கும் வழித்தடம் என்பதால் லட்சக்கணக்கானவர்கள் இந்த அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

மஞ்சள் வழித்தடம்: ஆர்வி சாலை தொடங்கி பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடம் மொத்தம் 19.5 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மொத்தம் 16 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த டிசம்பர் 2021 ஆம் ஆண்டிலேயே இந்த மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு தாமதங்களால் அந்த கட்டுமான பணியானது தற்போது தான் முடிக்கப்பட்டு இருக்கிறது.
விரைவில் ஆய்வு: கட்டுமான பணி முடிந்து இருக்கக்கூடிய சூழலில் உயர்மட்ட அதிகாரிகளின் தொழில்நுட்ப ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. வரும் 22 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மஞ்சள் வழித்தடத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அனைத்து ரயில் வழித்தடங்களையும் ஆய்வு செய்ய இருக்கிறார். மூன்று கட்டங்களாக ஆய்வு பணிகள் நடக்கும் என்றும் இந்த ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு அவர் இந்த பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என ஒப்புதல் தருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி திறந்து வைப்பார் என தகவல்: பிரதமர் நரேந்திர மோடியை கொண்டு இந்த பகுதியில் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு சுட்டிக்காட்டுகிறது. எலக்ட்ரானிக் சிட்டி பகுதியுடன் பெங்களூருவின் மற்ற பகுதிகளை இணைக்கக்கூடிய மெட்ரோ ரயில் திட்டம் என்பதால் இந்த வழித்தடம் மிகவும் முக்கியமான ஒரு வழித்தடமாக பார்க்கப்படுகிறது. எனவே தான் நரேந்திர மோடி கொண்டு இந்த பாதையில் ரயில் சேவைகளை தொடங்கி வைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
என்ன திட்டம்: தற்போதைக்கு கைவசம் இருக்கும் மூன்று ரயில்களை கொண்டு ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் என்ற இடைவெளியில் இயக்க திட்டமிட்டுள்ளனர். நவம்பர் மாதத்தில் இருந்து இந்த பாதையில் 7 ரயில்களை இயக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் 10 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications