இந்தியாவின் ஐடி நகரம் என்ற பெருமை கொண் பெங்களூர், இந்தியாவின் மோசமான டிராபிக் பிரச்சனை கொண்ட நகரம் என்ற அவபெயரையும் கொண்டு உள்ளது. இந்த டிராபிக் பிரச்சனையை தீர்க்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், பெரிய அளவில் பலன் அளித்தது மெட்ரோ சேவை விரிவாக்கம் தான். ஆனால் கர்நாடக அரசு பெங்களூர் மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் முக்கிய முடிவை இந்த வாரம் எடுக்க உள்ளது.
பெங்களூரு மெட்ரோ பயணிகள் விரைவில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட உள்ளது. பிப்ரவரி 9, 2026 முதல் மெட்ரோ கட்டணம் ரூ.1 முதல் ரூ.5 வரை உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 71 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்ட வேளையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு மத்தியிலும் இந்த உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது.

கட்டண உயர்வுக்கு காரணம் என்ன?
இந்த கட்டண உயர்வு குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) அதிகாரிகள் கூறுகையில், இது புதிய முடிவு அல்ல. கடந்த ஆண்டு கட்டண நிர்ணய குழு (Fare Fixation Committee - FFC) அளித்த பரிந்துரையின் படி ஆண்டுதோறும் ஆட்டோமேட்டிக் முறையில் 5 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும். புதிய குழு அமைக்கப்படும் வரை இந்த விதி கட்டாயமானது என்று குழு அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய கட்டணம் எவ்வளவு?
தற்போது பெங்களூரு மெட்ரோ நாட்டிலேயே அதிக கட்டணம் கொண்ட மெட்ரோ அமைப்பாக உள்ளது. 2 கி.மீ வரையிலான தொலைவிற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ஆகவும், 25 கி.மீக்கு மேல் அதிகபட்ச கட்டணம் ரூ.90ஆகவும் உள்ளது. 5 சதவீத ஆண்டு உயர்வு அமலுக்கு வந்தால் குறைந்தபட்ச கட்டணம் ரூ.11ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.95ஆகவும் உயரும்.
பொதுமக்களுக்கு ஏற்படும் தாக்கம்
அலுவலக ஊழியர்கள், மாணவர்கள், தினசரி வருமானம் பெறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மெட்ரோவை நம்பியுள்ளனர். ஒரு பயணத்துக்கு ரூ.1 முதல் ரூ.5 உயர்வு என்றாலும், மாதாந்திர செலவு கணிசமாக அதிகரிக்கும். பல குடும்பத்தில் பல மெட்ரோ வழியாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இந்த உயர்வு குடும்ப பட்ஜெட்டை பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே எரிபொருள் விலை, வாடகை, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் இது கூடுதல் சுமையாக அமையும்.
நகர போக்குவரத்து மீதான தாக்கம்
மெட்ரோ கட்டண உயர்வால், சில பயணிகள் பேருந்து, இருசக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்தத் தொடங்கலாம். இது சாலை நெரிசல் மற்றும் மாசுபாட்டை அதிகரிக்கும். மெட்ரோ சேவை கொண்டு வந்ததே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கட்டண உயர்வு ஏற்பட்டால் மக்கள் தனியார் வாகனங்களுக்கு மாற்றுவது அதிகரிக்கும்.
இந்த கட்டண உயர்வு கடந்த ஆண்டு கட்டண நிர்ணய குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஆட்டோமேட்டிக் முறையில் நடக்கிறது. புதிய குழு அமைக்கப்படும் வரை இது தொடரும் என்பதில் தற்போது வரையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ஆனால் கர்நாடக அரசு தலையிட்டு இந்த கட்டண உயர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications