பெங்களூர் மெட்ரோ: 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கம்.. மெட்ரோ நிலையத்தில் பயணிகள் அவதி..!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பீக் அவரில் பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

பெங்களூருவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து சரியான நேரத்திற்கு அலுவலகம் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்வதற்கு பலரும் மெட்ரோ சேவைகள் தான் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் பத்து நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டதால் பயணிகள் பெறும் அவதி அடைந்தனர்.

பெங்களூர் மெட்ரோ: 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கம்.. மெட்ரோ நிலையத்தில் பயணிகள் அவதி..!

பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மெஜஸ்டிக், மகடி ரோடு மற்றும் பிற மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டமாக ரயிலுக்காக காத்திருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. மக்கள் முந்தியடித்துக் கொண்டு மெட்ரோ ரயில்களில் ஏற முயல்வதும் இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

திடீரென ரயில்களின் நேர இடைவெளி மாற்றப்பட்டு இருப்பதே இந்த பிரச்சனைக்கு காரணம் என பெரும்பாலான பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தினம்தோறும் இந்த சமயத்தில் லட்சக்கணக்கானவர்கள் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்துவார்கள் என தெரிந்திருந்தும் நம்ம மெட்ரோ நிர்வாகம் அதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டிருப்பதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

அனைவருக்கும் விடுமுறை என நினைத்து பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கி இருக்கிறது இது மிகவும் மோசமான ஒரு மேலாண்மை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். மெட்ரோ ரயில் கழக நிர்வாகம் மற்ற வார நாட்களை போலவே இன்றைய தினத்திலும் ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய பெங்களூரு தொகுதி எம்பி மோகன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பலரும் காத்துக் கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்து அவர் இந்த கருத்தினை வெளியிட்டு இருக்கிறார்.

பெங்களூருவை சேர்ந்த பலரும் தாங்கள் எதிர்கொள்ள சிரமங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனரெ. ஒரு பயனர் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நான் 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்கிறேன் அண்மையில் தான் மெட்ரோ ரயில் கட்டணங்களை உயர்த்தினார்கள் தற்போது மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை குறைத்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

நீண்ட நேரம் காத்திருந்தும் ஏற்கனவே வந்த ரயில் கூட்டமாக வந்ததால் என்னால் ஏற முடியவில்லை சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியவில்லை என ஒரு பயனர் பதிவு செய்துள்ளார். ஒரு பயனர் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை மேலாண்மை செய்ய தவறிவிட்டது என்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு யாரேனும் உயிரிழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என்றும் ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+