பெங்களூரு நகரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மெட்ரோ சேவையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால், மஞ்சள் லைன் பாதையில் கட்டுமான பணிகள் முடிந்த பிறகும் சேவை தொடங்கப்படாதது மக்களை ஏமாற்றியுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் சேவை தொடக்கம் குறித்து வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பெங்களூரு நம்ம மெட்ரோவின் மஞ்சள் பாதை (Yellow Line) திறப்பு மீண்டும் தாமதமாகியுள்ளது. ஆர்.வி. ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான 19.15 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதை, 2024 நடுப்பகுதியில் பயன்பாட்டிற்கு வரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்த் பாடும் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்பது போல் பல மாதங்கள் ஆகியும் சேவை துவங்கப்படவில்லை. சில வாரங்களுக்கு முன்பு 3 டிரைன் செட் உடன் ஜூன் மாதம் இப்பாதையில் சேவை துவங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போது சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இப்போது ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் வரை திறக்கப்பட வாய்ப்பில்லை என டெக்கான் ஹெரால்டு அறிக்கை தெரிவிக்கிறது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) அதிகாரிகளின் கூற்றுப்படி, சிக்னல் அமைப்பிற்கான பாதுகாப்பு மதிப்பீட்டு சான்றிதழ் (Independent Safety Assessment - ISA) பெறுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு முக்கிய காரணம்.
மஞ்சள் பாதையின் சிக்னல் ஒப்பந்ததாரரான சீமென்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வழங்கிய மென்பொருள் தரவுத்தொகுப்புகளில் (software datasets) கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுக்குறித்து மூத்த BMRCL அதிகாரி ஒருவர் கூறுகையில் ரயில் இயக்கங்கள் முழுவதும் மென்பொருளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சிறிய பிழை இருந்தாலும், அமைப்பு பாதுகாப்பு பயன்முறைக்கு (safe mode) மாறிவிடும் என தெரிவித்தார். இதனால், பாதுகாப்பு சோதனைகள் முடியும் வரை ISA சான்றிதழை பெற முடியாத நிலை உள்ளது.
BMRCL அனைத்து சட்டப்பூர்வ சோதனைகளையும் முடித்துவிட்டாலும், ISA சான்றிதழ் பெறப்படாவிட்டால், மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CMRS) இறுதி ஆய்வை மேற்கொள்ள முடியாது. சீமென்ஸ் நிறுவனம், மென்பொருள் கோளாறுகளை சரிசெய்து, ஜூன் மாத இறுதிக்குள் டேட்டா செட்களை தயார் செய்வதாக உறுதியளித்துள்ளது. ஆனால், இந்த தாமதம் BMRCL-ன் கட்டுப்பாட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மஞ்சள் பாதையில் சேவை துவங்குவதற்கு ரயில்கள் விநியோகத்தில் தாமதம் தொடர்பான பிரச்சனை உடன் தற்போது
சிக்னல் அமைப்பு சிக்கல்களும் இணைந்துள்ளது. மஞ்சள் பாதைக்கு ரயில்களை வழங்கும் டிடாகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TRSL) நிறுவனம் ரயில் பெட்டி தயாரிப்புகளை வேகப்படுத்தி இருந்தாலும் குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்யப்படுமா என்பது தெரியவில்லை.
மஞ்சள் பாதையில் மெட்ரோ சேவையை துவங்க ஆறு ரயில்கள் தேவைப்படும், ஆனால் இதுவரையில் 3 ரயில்கள் மட்டுமே வந்துள்ளன. இந்த மூன்றும் சீனாவில் இருந்து பெறப்பட்டவை. மஞ்சள் பாதைக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் சிக்கல் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் பாதையின் திறப்பு ஏற்கனவே பல முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மே 2025-க்குள் இந்த பாதையை இயக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தார். ஆனால், முந்தைய அறிவிப்புகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், இந்த புதிய தாமதம் திட்டத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் லைன் பெங்களூரு நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான போக்குவரத்து திட்டமாகும். இது ஆர்வி ரோடு, பிடிஎம் லேஅவுட், சென்ட்ரல் சில்க் போர்டு, எலக்ட்ரானிக்ஸ் 18.82 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த பாதையில் 16 மெட்ரோ நிலையங்கள் உள்ளன, இவை அனைத்தும் சாலைக்கு மேலே (எலிவேட்டட்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதை நகரின் தெற்கு பகுதியை வடக்கு பகுதியுடன் முதன்முறையாக இணைப்பதால், இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பெங்களூருவின் மிக முக்கியமான பகுதியாகும், இங்கு உலகளாவிய ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் பல உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர், ஆனால் இப்பகுதியில் மெட்ரோ, பெரிய மால், நூலகம் மற்றும் அரசு கல்லூரிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மஞ்சள் லைன் மெட்ரோ சேவை தொடங்கினால், இப்பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயண நேரம் மற்றும் செலவு பெருமளவு குறையும்.
மஞ்சள் லைன் பெங்களூருவின் மற்ற மெட்ரோ பாதைகளுடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. ஆர்வி ரோடு மெட்ரோ நிலையத்தில் மஞ்சள் லைன் மற்றும் கிரீன் லைன் இணைக்கப்படுகின்றன. அதேபோல், ஜெயதேவா மருத்துவமனை மெட்ரோ நிலையத்தில் பிங்க் லைனுடன் இணைப்பு உள்ளது. இதன் மூலம், மஞ்சள் லைன் மூன்று முக்கிய மெட்ரோ பாதைகளை ஒருங்கிணைத்து இயக்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications