இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் தற்போது பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பது மெட்ரோ சேவை. நாள் முழுவதும் டிராபிக் பிரச்சனை இருக்கும் காரணத்தால் பெங்களூர் மக்கள் மெட்ரோ சேவையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் கட்டுமான பணிகளை அனைத்து முடிக்கப்பட்ட மஞ்சல் லைன் தடத்தில் இன்னும் சேவை துவங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கியமான தகவலை வெளியிட்டு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் இருக்கும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. BMRCL வெளியிட்டுள்ள அறிவிப்பில் நம்ம மெட்ரோவின் மஞ்சள் லைனுக்கான மூன்றாவது டிரைன்செட்-க்கு மூன்று மெட்ரோ ரயில் பெட்டிகள், மேற்கு வங்காளத்தின் உத்தர்பாராவில் உள்ள டிடகர் ரயில் சிஸ்டம்ஸ் தொழிற்சாலையிலிருந்து செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டன.

இந்த மூன்றாவது ரயில் தொகுதியின் மீதமுள்ள மூன்று பெட்டிகள், மே 2 ஆம் தேதிக்குள் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு கொண்டு வரப்படும் எனவும், இவை மே 10 முதல் மே 15ஆம் தேதிக்குள் பெங்களூர் வந்தடையும் எனவும் பிஎம்ஆர்சிஎல் அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் பெட்டிகளை பகுதி பகுதியாக அனுப்ப முக்கிய காரணம் மெட்ரோ பெட்டிகளைக் கொண்டு செல்ல தேவையான சிறப்பு வாகனங்கள் (டிரெய்லர்கள்) கிடைக்காதது தான் எனவும் பிஎம்ஆர்சிஎல் விளக்கியுள்ளது.
இருப்பினும், மீதமுள்ள பெட்டிகளை விரைவில் கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த மெட்ரோ பெட்டிகளின் வருகை, மஞ்சள் பாதையின் செயல்பாட்டை வேகப்படுத்தி விரைவில் மெட்ரோ சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மஞ்சள் பாதை, ஆர்வி ரோடு முதல் பொம்மசந்திரா வரை 18.82 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு, பெங்களூருவின் முக்கிய பகுதிகளை இணைக்க உள்ளது.
பெங்களூருவின் முக்கிய பகுதிகளான ஆர்வி ரோடு, பிடிஎம் லேஅவுட், சென்ட்ரல் சில்க் போர்டு, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மற்றும் பொம்மசந்திரா ஆகியவற்றை மஞ்சள் லைன் இணைக்கும் ஒரு முக்கிய போக்குவரத்து திட்டமாகும். 18.82 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட இந்த பாதையில் 16 மெட்ரோ நிலையங்கள் உள்ளது. இது அனைத்தும் சாலைக்கு மேலே அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகரின் தெற்கு பகுதிகளை வடக்கு பகுதியுடன் இணைக்கும் முதல் மெட்ரோ பாதை இது என்பதால் மிகவும் ஸ்பெஷல். தெற்கு பகுதி பல காலமாக வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தாலும் முக்கியமான சேவைகள் இங்கு இல்லை. குறிப்பாக மெட்ரோ, மால், பெரிய லைப்ரரி, அரசு கல்லூரிகள் போன்றவை குறைவு. இதற்கு மாறாக எலக்ட்ரானிக்ஸ் சிட்டி உலகளாவிய நிறுவனங்கள் குவிந்துக்கிடக்கிறது.
இதனால் இந்த மஞ்சள் லைன் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஐடி மற்றும் டெக் ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆக அமையும்.
ஆர்வி ரோடு மெட்ரோ நிலையத்தில் மஞ்சள் லைன் மற்றும் கிரீன் லைன் இணைக்கப்படுகிறது. இதேபோல் ஜெயதேவா மருத்துவமனை மெட்ரோ நிலையம் பிங்க் லைன் உடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் மஞ்சள் லைன் 3 மெட்ரோ பாதைகளையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications