இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நகரமான பெங்களூர் குறித்து எந்த செய்தி என்றாலும் மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெங்களூர் உடன் தொடர்புடன் இருப்பது தான்.
பெங்களூர் காலம் காலமாக விமர்சனம் பெற்று வரும் விஷயம் டிராபிக் தான், இதை தாண்டி சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயம் என்றால் தடாலடியாக உயர்ந்த வீட்டு வாடகை உயர்வு. வொர்க் ப்ரம் ஹோம் முடித்துவிட்டு பெங்களூருக்கு குடிவந்த பலர் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சனை அதீத வீட்டு வாடகை.

அதீத வீட்டு வாடகையை கேட்டு பழகி போன பெங்களூர் வாசிகளுக்கு முக்கியமான ஏரியாவிலோ அல்லது பெரிய வீடாகவோ இருந்தால் வாடகை அதிகமாக தான் இருக்கும் என்ற இயல்பு நிலையாக பார்க்க துவங்கியுள்ளனர். இப்படியிருக்கையில் சமீபத்தில் வாடகை வீடுகள் தேடும் தளத்தில் செய்யப்பட்ட பதிவு தற்போதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமான தளமாக இருக்கும் நோ ப்ரோக்கர்-ல் 1RK அதாவது ஒரு ரூம் மற்றும் சமையலறை கொண்ட வீடு வாடகைக்கு விடப்படுவதாக பட்டியலிடப்பட்டு உள்ளது. 1RK என்பது பெரு நகரங்களில் பரவலாக கிடைக்கும் ஒரு ஆப்ஷன் தான்.
ஆனால் இந்த வீடு ஒரு பெட் போடும் அளவுக்கு தான் இட வசதியே உள்ளது. மொத்த வீடும் இந்த ஒரு பெட் போடும் அளவுக்குள் அடங்குகிறது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இந்த நோ ப்ரோக்கர் பதிவை saiyaa என்பவர் ரெட்டிட் தளத்தில் பதிவிட்டதன் மூலம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த 1RK வீடு மகாதேவபுரா பகுதியில் அமைந்திருப்பதாகவும், இதற்கு மாதம் 12000 ரூபாய் வாடகை, 50000 ரூபாய் அட்வான்ஸ் கேட்கப்படுவதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டோ கூட நோ ப்ரோகர் தளத்தில் இருந்து பெறப்பட்டவை தான்.


Click it and Unblock the Notifications