விமான பயணம் என்பது அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் ஓன்றாக மாறிவிட்ட நிலையில், ஒவ்வொரு முறையும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு திக் திக் மொமெண்டாக இருப்பது பேகேஜ் வெயிட் தான். அதிலும் குறிப்பாக வெளிநாட்டு பயணத்தின் போது இந்த விஷயம் பெரும் தலைவலியாகவே இருக்கும்.
போர்டிங் பாஸ் வாங்கும் முன் பேகேஜ் கவுன்டரில் கூடுதல் எடை இருந்தால் தங்களுடைய பெட்டியை திறந்து பொருட்களை மாற்றுவதும், குறைப்பதும் என எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். கூடுதல் எடை இருந்தால் எடைக்கு ஏற்ப அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டும், இந்த கட்டணத்தை செலுத்த யாரும் விரும்பாத காரணத்தால் தான் இந்த நிலை.

இதே நேரத்தில் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நீங்கள் பயணம் செய்ய போறீங்கன்னா கூடுதல் ஜாக்கிரதையா இருங்க. சமீபத்தில் பெங்களூர் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
கிராஃபிக் டிசைனராக பணிபுரியும் டெல்லி பெண் ஒருவர், தனது இரு நண்பர்களுடன் உள்நாட்டு விமான பயணத்தை மேற்கொள்ள பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்கு வந்து தானியங்கி பேக் டிராப் இயந்திரத்தைப் பயன்படுத்தி அவருடைய பேகேஜ் -ஐ வைத்துள்ளார்.
இவருடை பேகேஜ் எடை 15.1 கிலோ இருந்துள்ளது, உள்நாட்டு விமான சேவையில் 15 கிலோ தான் ஒருவருக்கான பேகேஜ் வரம்பு. இந்த நிலையில் வரம்பை விட 100 கிராம் மட்டுமே அதிக எடை கொண்டு இருந்தது, இது ஒரு பெரிய விஷயமல்ல என்று அவர் நினைக்கையில் இயந்திரத்தை இயக்கும் ஊழியர்கள் அவளது பையை ஏற்க மறுத்துவிட்டனர்.
பெங்களூர் விமான நிலையை ஊழியர்கள் இந்த பெண்ணின் பேகேஜ்-ல் 100 கிராம் எடையைக் குறைக்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டனர், மேலும் அவர் தனது பையிலிருந்து சில பொருட்களை அங்கேயே எடுக்க வேண்டியிருந்தது. கூடுதலாக இருக்கும் 100 கிராம் எடையை தனது நண்பர்களின் பேகேஜ் எடை உடன் பகிர்ந்து கணக்கிட முடியுமா என்று கேட்டும் இதை கட்டாயமாக செய்ய முடியாது என மறுத்துள்ளனர்.
பொதுவாக விமான சேவையில் இதுப்போன்ற விஷயங்கள் அட்ஜெட் செய்யப்படும், கிட்டத்தட்ட 1 கிலோ வரையில் அட்ஜெட் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெங்களூரில் நிறுவப்பட்டு இருக்கும் automatic bag drop machine 15 கிலோ எடை வரையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தொழில்நுட்ப கட்டமைப்பு கொண்டு உள்ளது. இதேபோல் பெரிய சைஸ் பேகேஜ்-களையும் இதில் ஏற்பது இல்லை என கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய அதிகாரி விளக்கம் கொடுத்துள்ளார்.
இதனால் அடுத்த முறையில் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் ஏறினால் முன்கூட்டியே பேகேஜ் எடையை சரிபார்த்து எடுத்து செல்ல வேண்டியது கட்டாயம், மறந்து விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications