இந்தியாவின் ஐடி நகரம், கார்டன் சிட்டி, மொத்த ஊரையும் பிரிட்ஜ்க்குள் வைச்ச மாதிரி கிளைமேட் எனப் பெங்களூர் பெருமையை நாள் முழுக்கப் பேசிக்கொண்டு போகும் இதேவேளையில் பெங்களூர் டிராபிக் பற்றியும் அழுது புலம்ப நாள் முழுக்கக் கதை ஓவ்வொரு பெங்களூர்வாசிக்கும் உண்டு. ஆனால் அதையெல்லாம் பார்த்த பொழப்பு ஓடாது என்பதால் பெங்களூர் மக்கள் இந்த டிராபிக்கிற்குப் பழகிவிட்டனர்.
இக்கட்டான நிலையில் இருக்கும் போது தான் பல புதுப் புது ஐடியா தோன்றும் என்பது போலப் பெங்களூர் டிராபிக்கில் ஊறிப்போன மக்களில் ஒரு பெண், தனது திருமணத் தினத்தில் செய்த வேலை தான் ஒரு வருடத்திற்கு பின்பு மீண்டும் இந்தியாவே பேசுபொருளாக மாறியுள்ளது.

பெங்களூரில் திருமணம் செய்துகொள்ளும் பெண் ஒருவர், திருமணம் நடக்கும் இடத்திற்குச் சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் கார்-ஐ விடுத்து மணக்கோலத்தில் மெட்ரோ ரயிலில் செல்லும் காட்சி பலரையும் வியக்க வைத்ததைத் தாண்டி ஷாக் கொடுத்துள்ளது.

இவருடைய வீடியோ கடந்த ஒரு வாரமாக இணையத்தில் டிரெண்டாகி வருவதோடு, பிரபல திருமணத் தரகு நிறுவனமான பார்த் மேட்ரிமோனி தளம் இவருடைய திருமணத்தை மெட்ரோவாலே துல்ஹனியா லே ஜாயேங்கா செல்லமாக அழைத்துள்ளது. இந்த வீடியோ-வை நீங்களே பாருங்க. இந்த வீடியோ வெளியாகி ஒரு வருடம் ஆகியிருந்தாலும், இன்றும் பெங்களூர் டிராபிக் பிரச்சனை தீரவில்லை என்பதை நினைவுகூறும் வகையில் இந்த வீடியோ தற்போது மீண்டும் டிரெண்டாகியுள்ளது.
Whatte STAR!! Stuck in Heavy Traffic, Smart Bengaluru Bride ditches her Car, & takes Metro to reach Wedding Hall just before her marriage muhoortha time!! @peakbengaluru moment 🔥🔥🔥 pic.twitter.com/LsZ3ROV86H
— Forever Bengaluru 💛❤️ (@ForeverBLRU) January 16, 2023
இதுபோன்ற சம்பவம் உங்க திருமணத்திலும் நடந்தால் எப்படியிருக்கும், கடைசி நேரத்தில் பொண்ணு மண்டபத்திற்கு வரவில்லையெனில் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்க. ஆனா இந்த வீடியோவில் யாரும் பதற்றம் அடையாமல் கூலாகச் செல்வதைப் பார்க்கும் போது இதெல்லாம் எங்களுக்குப் பழகிவிட்டது என்ற மனநிலையில் அவர்கள் இருப்பதைத் தான் காட்டுகிறது.
மணப் பெண் மணக்கோலத்தில் மெட்ரோ ரயிலில் ஏறி சென்ற தருணத்தின் மூலம் இவருடைய திருமணம் செலிப்ரிட்டி திருமணம் போல் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.
இதே பெங்களூர் டிராஃபிக் இன்னொரு இடத்தில் வில்லனாக மாறிய சம்பவமும் நடந்திருக்கும். ஒரு புது மண ஜோடி திருமணமான ஒரு நாள் கழித்துத் தனது மணமகளை விட்டு மணமகன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம், இந்தத் தம்பதியினர் தேவாலயத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மகாதேவபுராவில் அவர்களது கார் டிராபிக்கில் மாட்டிக்கொண்டது.
அந்த நபர் நடுரோட்டில் காரின் கதவை திறந்து கொண்டு ஓடினார். அவரது மனைவி காரில் இருந்து இறங்கி துரத்த முயன்றார் ஆனால் அவரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்தப் பெண் பெங்களூரு போலீசில் புகார் அளித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications