மும்பை: பெங்களூரு மற்றும் மும்பை இடையிலான எக்ஸ்பிரஸ்வே பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு இந்த இரண்டு நகரங்களையும் இணைக்கும் வகையில் 14 வழி கொண்ட எக்ஸ்பிரஸ்வே விரைவில் கட்டமைக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நிதின் கட்கரி மும்பை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களில் இந்த திட்டப்பணிகள் தொடங்கிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த புதிய எக்ஸ்பிரஸ்வே மும்பையின் அடல் பாலத்தில் தொடங்கி புனே ரிங் சாலை வழியாக ,சத்ரபதி சம்பாஜி நகர் ஆகியவற்றை கடந்து செல்லும் எனக் கூறியுள்ளார்.
தற்போது உள்ள நெடுஞ்சாலைக்கு மாற்றாக இந்த எக்ஸ்பிரஸ்வே அமையும் என்றும் இந்த எக்ஸ்பிரஸ்வே கட்டுமான பணிகள் முழுமை அடைந்த பிறகு தற்போது மும்பை புனே எக்ஸ்பிரஸ்வேயை பயன்படுத்தும் வாகனங்கள் இந்த புதிய பாதையில் திருப்பி விடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த மிகப்பெரிய சாலை திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது, விரைவில் களப்பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் முன்மொழியப்பட்டுள்ள இந்த எக்ஸ்பிரஸ்வே தொடர்பாக அமைச்சரும் அதிகாரிகளும் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஏனெனில் தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரியான விலாஸ் பி பிராமண்கர் மும்பை மற்றும் பெங்களூருவை இணைப்பதற்கான 14 வழி எக்ஸ்பிரஸ்வே அமைப்பதற்கான எந்த ஒரு முன்மொழிவும் தற்போது இல்லை என கூறியிருந்தார். தற்போது பயன்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வதில் தான் தாங்கள் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மற்றும் புனே இடையினான தேசிய நெடுஞ்சாலையை புதிதாக கட்டமைப்பதற்கான பணிகள் ஆரம்பகட்ட திட்டமிடல் நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் நிதின் கட்கரி மும்பை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தற்போது பெங்களூர் மற்றும் மும்பை இடையே இரண்டு பிரதான வழி பாதைகள் இருக்கின்றன. ஒன்று பெங்களூரு -ஹப்லி -பெலகாவி - புனே மும்பை ஆகியவற்றின் வழியே செல்லக்கூடிய nh48 இது 986 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மற்றொரு பாதை பெங்களூரு - தும்கூர் - சித்ரதுர்கா - விஜயநகர் மற்றும் பாகல்கோட்டை வழியாக மகாராஷ்டிராவை அடைகிறது இது 900 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications