ஆசியாவிலேயே பெங்களூரு தான் டாப்.. உலக நாடுகளே வியந்து பார்க்கும் டெக் சிட்டி.. ஏன்.. எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெங்களூருவில் தான் அலுவலக வாடகை என்பது மிக அதிகளவில் இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

பெங்களூருவை தொடர்ந்து மும்பையும் மற்றும் என்சிஆரும் உள்ளன.

நைட் பிராங்கின் ஆசிய பசிபிக் பிரைம் ஆபீஸ் ரெண்டல் இன்டெக்ஸ் Q4 2022 (Knight Frank's Asia-Pacific Prime Office Rental Index Q4 2022) ஆனது, கடந்த 2022ம் ஆண்டின் 4வது காலாண்டில் பெங்களூரில் கடந்த ஆண்டினை காட்டிலும் வாடகை வளர்ச்சியானது 11% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 மும்பை  & என் சி ஆர் நிலவரம்

மும்பை & என் சி ஆர் நிலவரம்

இதே மும்பையில் கடந்த ஆண்டினை காட்டிலும் வாடகை விகிதமானது 7% வளர்ச்சியினை கண்டுள்ளது. என்சிஆரில் வாடகை நிலையானதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் ஏற்கனவே என் சி ஆரில் வாடகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 வாடகை அதிகரிக்கும்

வாடகை அதிகரிக்கும்

இந்த காலாண்டில் இந்த மூன்று நகரங்களிலுமே பிரதான வாடகை என்பது நிலையானதாக இருந்தது. தற்போது தேவையானது அதிகரித்து வரும் சூழலில், அடுத்த 12 மாதங்களில் பெங்களூரு, மும்பை, என் சி ஆரில் வாடகை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

20 நாடுகள் பட்டியலில்

20 நாடுகள் பட்டியலில்

இந்த APAC சந்தையில் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில், சீனா, இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கும்.

இந்திய பொருளாதாரம் என்பது படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில் பணவீக்கத்தின் அச்சம் இருந்து வருகின்றது. இது மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தில் தக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு வணிக வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பொருளாதாரத்தில் அச்சம்

பொருளாதாரத்தில் அச்சம்

மேலும் தொடர்ந்து பெருந்தொற்றின் அச்சமும் நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் சர்வதேச பொருளாதாரம் என்பது எதிர்பார்ப்பினை விட சரிவில் காணப்படுகின்றது. அதேசமயம் இந்தியாவின் வளர்ச்சி என்பது மெதுவாக காணப்பட்டாலும் சற்றே வளர்ச்சி பாதையில் உள்ளது ஆரோக்கியமானதொரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

வேறு எங்கெல்லாம் அதிகம்

வேறு எங்கெல்லாம் அதிகம்

இந்தியா தவிர, ஆக்லாந்து, சிங்கப்பூர் மற்றும் பாங்காங் உள்ளிட்ட நாடுகள் வாடகை வளர்ச்சிக்கான பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளன. எனினும் அடுத்த 12 மாதங்களில் பாங்காங்கில் வாடகை விகிதம் குறையலாம் என இந்த அறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது.

ஆக்கிரமிப்பு செலவு

ஆக்கிரமிப்பு செலவு

இந்திய நகரங்களில் என்சிஆரில் ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 78.7 டாலர் ஆகவும், அதனை தொடர்ந்து மும்பையில் ஒரு சதுர அடிக்கு 70.8 டாலர் ஆகவும், பெங்களூருவில் ஒரு வருடத்திற்கு 36.3 டாலராகவும் ஆகவும் பதிவு செய்துள்ளது. அதிகபட்சமாக 2022ம் ஆண்டின் 4வது காலாண்டில் ஹாங்காங்கின் SAR ஆண்டுக்கு 174.3 டாலர்களை அதிகபட்சமாக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து சிங்கப்பூர் சதுர அடிக்கு 109 டாலராகவும், டோக்கியோவில் சதுர அடிக்கு 92.8 டாலராகவும் பதிவு செய்துள்ளது.

 2023 சாதகமாக இருக்கலாம்

2023 சாதகமாக இருக்கலாம்

2023ம் ஆண்டில் சந்தை நிலைமைகள் குத்தகைதாரர்களுக்கு ஆதரவாக இருக்கும். ஏனெனில் நிலையான தேவையான வசதிகளை கொண்ட கட்டிடங்கள் பலவும், பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாகவும் அறிக்கை கணித்துள்ளது.

இது நிறுவனங்களின் செலவினை கட்டுக்குள் வைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக நிறுவனங்கள் பெரிதும் எதிர்கொள்ளும் செலவில் அலுவலக வாடகை முக்கியமானதாக இருக்கும்.

வீடு விலை அதிகரிக்கலாம்

வீடு விலை அதிகரிக்கலாம்

இது ஒரு புறம் எனில் மறுபுறம் இதுவே வீட்டு வாடகை, வீட்டின் விலைகளையும் உயர்த்த வழிவகுக்கலாம். மக்கள் அதிகளவில் தங்களது வேலைகள் காரணமாக நகரங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இது வீட்டினை வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு வீட்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bengaluru, mumbai and NCR record highest office rental growth in APAC

bengaluru, mumbai and NCR record highest office rental growth in APAC
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X