இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் டிராபிக் பிரச்சனை தலைவிரித்தாடும் வேளையில், நகரின் முக்கிய பகுதிகளை மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்படும் காரணத்தால் பல இடத்தில் டிராபிக் பிரச்சனை குறைந்து வருகிறது.
உதாரணமாக சமீபத்தில் ஓசூர் சாலையில் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தால் இச்சாலையில் 10 சதவீத டிராபிக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மெட்ரோ சேவையை அனைத்து தரப்பு மக்களும் அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக கட்டண நிர்ணயக் குழு (எஃப்எஃப்சி) பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் மெட்ரோ டிக்கெட் விலையில் 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் முதல் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் தினசரி பயன்படுத்தும் மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது
கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) மெட்ரோ கட்டணத்தை 71 சதவீதம் வரை உயர்த்தியது. இதனால் பெங்களூர் மெட்ரோ தான் இந்தியாவின் விலை உயர்ந்த மெட்ரோ என பெயர் பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் வருடாந்திர அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது. இது டிராபிக் பிரச்சனையை சமாளிக்க பொது போக்குவரத்து பயன்படுத்துபவர்களுக்கு பெரும் பொருளாதார சுமையாக அமையும். இந்த நிலையில் மெட்ரோ பயணிகள் இந்த உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாமானிய மக்களுக்கு பொது போக்குவரத்து அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்தியா முழுவதும் தனிநபர் போக்குவரத்து அதிகரித்து வரும் காரணத்தால் டிராபிக் பிரச்சனை மட்டும் அல்லாமல் பார்கிங் பிரச்சனையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்யும் வகையில் கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வர பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகிறது.
இதேபோல் மெட்ரோ நகரங்களில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இத்தகைய கட்டணத்தை உயர்வு மக்களை இதை பயன்படுத்துவதை நிறுத்தும் மனநிலையை அதிகரிக்கும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications