பெங்களூரு: உலக அளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருவதற்கு இங்கு காணப்படும் பணிச்சூழலே காரணம் என சொல்லப்படுவது உண்டு.
அலுவலகம் என்றால் மேசைகள், இருக்கைகள் , ஆலோசனை கூட்டத்திற்கான அறைகள், உணவருந்தும் இடம் ஆகியவை மட்டுமே இருக்கும் என்பதை மாற்றி ஊழியர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொண்டு சிறப்பாக செயல்படும் வகையிலான அலுவலகங்களை சர்வதேச டெக் நிறுவனங்கள் ஏற்படுத்தி தருகின்றன. அப்படி தான் கூகுள் நிறுவனம் அனைத்து ஊழியர்களின் கனவு அலுவலகமாக தங்களின் அலுவலகங்களை கட்டமைத்து இருக்கிறது.

கூகுள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய மிகப்பெரிய அலுவலகத்தை நிறுவியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பெங்களூருவின் வைட்ஃபீல்டு பகுதியில் தான் இந்த புதிய கூகுள் அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. அனந்தா என இதற்கு பெயர் சூட்டியுள்ளனர். பார்ப்பதற்கே மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது இந்த அலுவலகம்.
வேலை செய்யும் இடமாக மட்டுமில்லாமல் பணியாளர்களுக்கு மிகச்சிறந்த ஒரு மனநிலையையும் தரமான வேலை சூழலையும் அமைத்து தரும் வகையில் இந்த அலுவலகம் அமைந்திருப்பது வீடியோவில் தெரிய வருகிறது. குறிப்பாக ஊழியர்கள் பணி நேரம் போக தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள ஏதுவாக பல்வேறு கேம்கள் விளையாடுவதற்கான இடங்கள் இந்த அலுவலகத்தில் நிறுவப்பட்டு இருப்பது தான் இதன் தனி சிறப்பு.
அடுத்ததாக ஊழியர்களுக்கு பல்வேறு விதமான உணவுகள் வழங்க பிரம்மாண்டமான முறையில் மிகப்பெரிய கேண்டின் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கிறதாம். இந்த மிகப்பெரிய அலுவலக வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கனவு அலுவலகம் இது என கூறுகின்றனர்.
இது தவிர உடற்பயிற்சி மையம், யோகா செய்யும் அறை ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இப்படி ஒரு அலுவலகத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என விரும்புவார்கள் அந்த வகையில் இந்த அலுவலகமானது அமைக்கப்பட்டிருக்கிறது.
கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் தான் பெங்களூருவில் இந்த மிகப்பெரிய அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்தது. பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதியில் இருக்கக்கூடிய இந்த கூகுள் அலுவலகம் சுமார் 6.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது.
மூன்று ஆண்டுகளுக்கு இந்த அலுவலகத்தை கூகுள் நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் நான்கு இடங்களில் தன்னுடைய அலுவலகத்தை நிறுவி செயல்படுத்தி வருகிறது . ஹைதராபாத் பெங்களூர், மும்பை மற்றும் குருகிராம் இடங்களில் கூகுள் நிறுவனத்தின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications