பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்றாலே ஸ்டார்ட் அப் தலைநகரம் ,ஐடி தலைநகரம் ,அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய ஒரு நகரம், பார்ட்டி கலாச்சாரம் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நகரம் என பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன.
அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு அடையாளமாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. பெங்களூருவில் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு இடத்திற்கு சென்று திரும்பி வரவேண்டும் என்றாலே பலருக்கும் தலைவலி வந்துவிடும். டிராபிக்கல் பயணம் செய்து அலுவலகத்திற்கு சென்று வர வேண்டுமே, பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வர வேண்டுமே என பலரும் சலித்துக் கொள்வார்கள்.

இந்தியாவில் யாரிடமாவது நான் பெங்களூரில் வசிக்கிறேன் என கூறி பாருங்கள் அந்த ஊர் டிராபிக்ல எப்படி இருக்கீங்க என கேட்பார்கள். பெங்களூர் என்றாலே டிராபிக் ஜாம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் மனதில் நிறைந்திருக்கிறது. பெங்களூரு டிராபிக் ஜாம் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு ஒருபுறம் ஏஐ கேமராக்களை பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்து நிகழ நேர தகவல்களை வழங்குகிறார்கள் , மற்றொருபுறம் சாலையை உள் கட்டமைப்புகளை சீரமைக்கிறார்கள், எல்லா பக்கமும் மெட்ரோ ட்ரெயின் விடுகிறார்கள் இருந்தாலும் எப்பொழுது பார்த்தாலும் சாலைகள் எங்கும் பேருந்து ,கார்கள் ,இருசக்கர வாகனங்களாகவே காணப்படுகின்றன .
கர்நாடக மாநில அரசு பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என பெங்களூருவில் செயல்படும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டன . அதில் மிக முக்கியமான ஒன்றுதான் congestion tax. அதாவது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய சாலையில் 90 நாட்களுக்கு முதல் கட்டமாக இதனை நடைமுறைப்படுத்தி பார்க்க கர்நாடக மாநில அரசு திட்டமிட்டு இருக்கிறது.
Congestion tax என்றால் ஒன்றுமில்லை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்கான வரி . அதாவது பெங்களூருவில் எப்பொழுதுமே டிராபிக் அதிகமாக காணப்படும் சாலைகளில் பீக் அவர்களில் ஒரு நபர் சிங்கிளாக காரை எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறார் என்றால் அவருக்கு இந்த வரி விதிக்கப்படும். அதாவது ஒருவருக்காக அவர் ஒரு காரை கொண்டு வருவதால் அந்த சாலையில் டிராபிக் அதிகமாகி விடுகிறதாம். எனவே இவ்வாறு வரி கூடுதல் வரிவிதித்தால் மக்கள் ஒரு நபருக்காக கார் எடுத்து பயன்படுத்துவதை நிறுத்துவார்கள் இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என அரசு கருதுகிறது.

குறிப்பிட்ட அந்த காருக்கான ஃபாஸ்ட் டேக் கணக்கிலிருந்து இந்த வரி என்பது எடுத்துக் கொள்ளப்படுமாம். இதன்படி அவுட்டர் ரிங் சாலையில் இது நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள். அவுட்டர் ரிங் சாலையில் இனி சிங்கள் நபருக்காக கார் எடுத்துக்கொண்டு பயணம் செய்பவர்கள் இந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும் . இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் இருந்தால் பிரச்சனை கிடையாது.
அடடே மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களால இவ்ளோ நன்மைகளா?
தற்போதைக்கு இது பரிந்துரையில் தான் இருக்கிறதே தவிர இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை ஆனால் இவ்வாறு வரி விதிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், ஒரு நபருக்காக ஒரு காரை பயன்படுத்துவது குறைந்து அதிகமானவர்கள் பொது போக்குவரத்தையும் கார் பூலிங் சேவைகளையும் பயன்படுத்துவார்கள் இந்த கூடுதல் வருவாய் என்பது உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்கிறது அரசு.
பொதுமக்களோ போதிய அளவு பொது போக்குவரத்து இணைப்புகளையும் , சாலைகளையும் மேம்படுத்தாமல் இப்படி கூடுதல் வரிவிதித்து விட்டால் மட்டும் டிராபிக் பிரச்சனை தீர்ந்து விடுமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் . உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அரசு அதனை தவறி விட்டு பொதுமக்கள் மீது இப்படி வரி விதிப்பது எப்படி சரி ஆகும் என பலரும் கூறுகின்றனர் . சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களில் இதனை செயல்படுத்தினார்கள் என்றால் அங்கே பொது போக்குவரத்து வலுவாக உள்ளது பெங்களூருவில் அப்படி இருக்கிறதா என கேள்வி எழுப்புகின்றனர். எது எப்படியோ இனி சிங்கிளாக கார் எடுத்து சென்றால் முதலில் இந்த கூடுதல் வரி தான் அனைவருக்கும் நினைவில் வரும். சிங்கிளாகவே இருப்பவர்கள் நிலைமை கொஞ்சம் மோசம் தான்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications