வட இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குளர்காலத்தில் இந்தப் பிங்க் நிற பூக்கள் பூத்து காணப்படும். இப்போது பெங்களூரில் இந்த பிங்க் ப்ளாசம் பூக்கள் சீசன் பிறந்துள்ளது.
பெங்களூரில் உள்ள பிரபல பூங்காக்கள், சாலையோரங்களில் இருக்கும் மரங்களில் பிங்க் பிளாசம் மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சி பார்ப்பவர்களின் இதயத்தைக் கவர்கிறது.

பார்ப்பதற்கு செர்ரி பிளாசம் மலர்களைப் போன்றிருக்கும் தாபேபுயா அவலானெடே (Tabebuia avellanedae), தாபேபுயா ரோஸியாவும் (Tabebuia rosea) இதே பிங்க் நிறத்தில் பூக்கும் மலர்கள் ஆகும். டெக் சிட்டியான பெங்களூரில் டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த பிங்க் நிற பூக்கள் மலர்ந்திருக்கும்.
பிங்க் பிளாசம் எனப்படும் பிங்க் டிரம்பெட் மலர்களை இந்தியாவுக்கு பிரிட்டிஷார் கொண்டு வந்தனர். இங்கிலாந்தில் வசந்த காலத்தில் பூக்கும் இந்த மலர்களை பார்க்க முடியாத ஏக்கத்தில் பிரிட்டிஷார் இந்தியாவுக்குக் கொண்டு வந்து நட்டுள்ளனர். இந்த பூக்களின் பூர்வீகம் தென் அமெரிக்கா ஆகும்.
இந்தப் பூக்களின் இதழ்கள் டிரம்பெட் வடிவத்தில் மஞ்சள் நிற தண்டுகளைக் கொண்டிருக்கும். பெங்களூரில் பசுமைப் போர்வையை அதிகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தோட்டக்கலை நிபுணர்களால் இங்கு மரங்கள் நடப்பட்டன. இந்த பூக்கள் பூக்க அனுமதித்த ஆங்கிலேயர்கள் உட்பட பெங்களூரின் முந்தைய ஆட்சியாளர்களின் முயற்சிகளின் கலவையே இது என்று தோட்டம் மற்றும் தாவர நிபுணர் காவ்யா சந்திரா கூறுகிறார்.
பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் தோட்டக்கலை வல்லுநர்கள் - 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் , அரசாங்க தோட்டத்தின் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் பெங்களூரில் தோட்டக்கலைப் பொறுப்பை ஏற்று, லால்பாக் மற்றும் நகரின் பல பகுதிகளில் மரங்களை நட்டார்.
குஸ்டாவ் குரும்பிகல் போன்றவர்கள், காலனித்துவ பிரதேசங்களில் இருந்து மரங்களை இறக்குமதி செய்தனர் என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தாலும் அவர்கள் கொண்டு வந்த பிங்க் பிளாசம் மலர்கள் பெங்களூரில் இன்னும் பூத்துக் குலுங்கி மக்களின் இதயத்தைக் கவர்ந்து வருகின்றன.
1980களில் எஸ்ஜி நேனிஹால் என்ற இந்திய வனத்துறை அதிகாரி பெங்களூர் முழுவதும் இந்த மலர்களை நட்டார். அவர் பிரபலமான தோட்டக்கலை நிபுணராகவும் இருந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் போகன்வில்லா, மா, நாவல்பழம், ஆகாச மல்லிகை செடிகள் உள்பட 15 லட்சம் மரக்கன்றுகளை நேனிஹால் நட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications