பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இந்தியாவிலேயே எந்த நகரத்தில் அதிக அளவிலான சைவ உணவுகள் ஆர்டர் செய்யப்படுகின்றன என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஸ்விக்கி, ஸோமேட்டோ உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி நாம் நமக்கு பிடித்த உணவகங்களில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்து நமது வீட்டிலேயே டெலிவரி பெற முடிகிறது. அந்த வகையில் ஆன்லைன் டெலிவரி சேவையில் முன்னணியில் இருக்கிறது ஸ்விக்கி.
ஸ்விக்கி நிறுவனம் இந்தியாவின் எந்த நகரத்தில் சைவ உணவுகளுக்கான ஆர்டர்கள் அதிகம் கிடைக்கப்பெற்றன என்ற தகவலை வெளியிட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் சைவ உணவுக்கான ஆர்டர்கள் ஹரித்வார், மதுரா, அயோத்தி ஆகிய நகரங்களில் இருந்து வந்திருக்கலாம் என எண்ணலாம். ஆனால் ஸ்விக்கி வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் பெங்களூரு நகரத்தில் தான் அதிகளவிலான சைவப் பிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்விக்கி நிறுவனத்திற்கு கிடைத்த மூன்றில் ஒரு சைவ உணவு ஆர்டர் பெங்களூர் நகரத்திலிருந்து வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் நிலையில் அதனை வெஜ் வேலி என அழைக்கும் அளவிற்கு அங்கே சைவ பிரியர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதன்படி பெங்களூருவில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்ட மிக பிரபலமான சைவ உணவுகளாக இருப்பவை மசாலா தோசை, பன்னீர் பிரியாணி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆகும்.
குறிப்பாக காலை உணவுக்காக ஆர்டர் செய்பவர்கள் பெரும்பாலும் மசாலா தோசை, வடை, இட்லி மற்றும் பொங்கல் ஆகியவற்றையே விரும்புகின்றனர். பெங்களூரை தவிர்த்து இந்தியா முழுவதுமே பிரபலமாக இருக்கக்கூடிய காலை உணவு மசாலா தோசை என்கிறது ஸ்விக்கி வெளியிட்டுள்ள தகவல். சைவ உணவு ஆர்டர்களை பெறும் நகரங்களில் மும்பை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கே தால் கிச்சடி , மார்கரிட் பீட்சா மற்றும் பாவ் பாஜி ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன.
இந்த பட்டியலில் ஹைதராபாத் நகரம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இங்கே மசாலா தோசை மற்றும் இட்லி பிரியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்தியா முழுவதுமே பிரபலமான ஒரு சைவ உணவாக மசாலா தோசை இருப்பதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்நாக்ஸ் வகைகளில் மார்கரிட் பீட்சா முதலிடத்திலும், சமோசா இரண்டாமிடத்திலும் உள்ளது. பாவ் பாஜி இந்த பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. மேலும் சைவ உணவு பிரியர்கள் பெரும்பாலானவர்கள் சாலட்களை ஆர்டர் செய்வதும் அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications